Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

‘வெடுக்குநாறிமலை சம்பவத்தால் மன உளைச்சலுக்கு உள்ளானேன்’ (VIDEO)

T

The Leader Desk

ஏப்ரல் 2, 2024 • 8:51 AM

‘வெடுக்குநாறிமலை சம்பவத்தால் மன உளைச்சலுக்கு உள்ளானேன்’ (VIDEO)   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உரிய குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதோடு இழப்பீடு பெற்றுத் தருமாறும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
  • இன்றையதினம் (02) இடம்பெற்றுவரும் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனை தெரிவித்தார்.
  • “வெடுக்குநாறிமலையில் பொலிஸார் இனவாத ரீதியிலேயே செயற்பட்டனர்.
எழுத்து அளவு:

உரிய குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதோடு இழப்பீடு பெற்றுத் தருமாறும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

‘வெடுக்குநாறிமலையில் பொலிஸார் இனவாத ரீதியிலேயே செயற்பட்டனர். மதவாதத்தின் அடிப்படையில் செயற்பட்டார்கள். இவ்வாறாக, பொலிஸாரின் செயற்பாடுகளால் மன உளைச்சலுக்கு நான் உள்ளாக்கப்பட்டேன்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இன்றையதினம் (02) இடம்பெற்றுவரும் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது,

“வவுனியா வடக்கு - வெடுக்குநாறிமலை ஆதிசிவன் கோயிலில், கடந்த சிவராத்திரி தினத்தன்று இடம்பெற்ற சட்டவிரோதமான கைது மற்றும் துன்புறுத்தல்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்.

“அதேவேளை, நான் பாராளுமன்ற உறுப்பினர் என்று தெரிந்துகொண்டு, வேண்டுமென்று உயிராபத்தை ஏற்படுத்தும் வகையில் என்னை அச்சுறுத்தி, அரசியல் செயற்பாடுகளில் இருந்து என்னை ஓரங்கட்டும் நோக்கில் நன்கு திட்டமிட்ட வகையில் தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

“வெடுக்குநாறிமலையில் பொலிஸார் இனவாத ரீதியிலேயே செயற்பட்டனர். மதவாதத்தின் அடிப்படையில் செயற்பட்டார்கள். இவ்வாறாக, பொலிஸாரின் செயற்பாடுகளால் மன உளைச்சலுக்கு நான் உள்ளாக்கப்பட்டேன். அத்துடன் வெடுக்குநாறிமலையில் ஒன்றுகூடும் சுதந்திரம் மற்றும் அடிப்படை மனித உரிமைகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளது.

“சுதந்திரமாக அரசியலில் ஈடுபட முடியாத அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதுடன் என்னுடன் பணியாற்றினால் பொலிஸாரினால் பழிவாங்கப்படுவோம் அவமானப்படுத்தப்படுவோம் என்கின்ற அச்சம் பாராளுமன்ற உறுப்பினராகிய என்னுடன் பணியாற்றும் உத்தியோகபூர்வ பணியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

“இதனால் எனது கடமைகளை ஆற்றமுடியாதுள்ளது. இதன் மூலம் எனது கௌரவத்திற்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளது. மேற்படி சம்பவங்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு எனக்கும் எனது செயலாளருக்கும் ஏற்பட்ட அபகீர்த்திக்கு இழப்பீடு பெற்றுத்தரவேண்டும் என்றும் குற்றவாளிகளுக்கு தண்டணை வழங்க வேண்டும்” எனவும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

‘வெடுக்குநாறிமலை சம்பவத்தால் மன உளைச்சலுக்கு உள்ளானேன்’ (VIDEO) | Tamil Leader | We Lead the Nation