Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

இலங்கையின் சட்ட அபிவிருத்திகள் குறித்து UNHRC அதிருப்தி

T

The Leader Desk

மார்ச் 5, 2024 • 4:06 AM

இலங்கையின் சட்ட அபிவிருத்திகள் குறித்து UNHRC அதிருப்தி   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சட்ட அபிவிருத்திகள் குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளது.
  • மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் குடியுரிமை தொடர்பான பல முக்கியமான சட்ட வளர்ச்சிகள் உள்ளன.
  • கனடா, மலாவி, மொண்டெனேகுரோ, வடக்கு மாசிடோனியா, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்காவை உள்ளடக்கிய இலங்கை தொடர்பான இந்த முக்கிய குழுவின் சார்பாக ஐக்கிய நாடுகளுக்கான ஐக்கிய இராச்சியத்தின் துணை நிரந்தர பிரதிநிதி ரீட்டா பிரெஞ்ச் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
எழுத்து அளவு:

சட்ட அபிவிருத்திகள் குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளது.

கனடா, மலாவி, மொண்டெனேகுரோ, வடக்கு மாசிடோனியா, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்காவை உள்ளடக்கிய இலங்கை தொடர்பான இந்த முக்கிய குழுவின் சார்பாக ஐக்கிய நாடுகளுக்கான ஐக்கிய இராச்சியத்தின் துணை நிரந்தர பிரதிநிதி ரீட்டா பிரெஞ்ச் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இணையத் தகவல்தொடர்பு தொடர்பான சட்டம், கிட்டத்தட்ட அனைத்து வகையான வெளிப்பாடுகளையும் குற்றமாக்கலாம், இது கருத்து சுதந்திரத்தின் மீது குளிர்ச்சியான விளைவை ஏற்படுத்தும் சூழலை உருவாக்குகிறது என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த நிலையில் இலங்கையின் மனித உரிமைகள் கடமைகள் மற்றும் அர்ப்பணிப்புகளுடன் இந்தச்சட்டத்தை சீரமைக்கும் வகையில் திருத்தங்களைச் செய்யுமாறு அவர் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

மேலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு பதிலாக இலங்கையின் சர்வதேசக் கடமைகளுக்கு இணங்க சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்றும், அநியாயமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள பயங்கரவாத தடைச் சட்டக் கைதிகளை விடுதலை செய்வதை ஊக்குவித்தல் மற்றும் இலங்கை தடைக்காலத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் முக்கிய குழு சார்பில் ரீட்டா பிரெஞ் கோரிக்கை விடுத்துள்ளார்.

மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் குடியுரிமை தொடர்பான பல முக்கியமான சட்ட வளர்ச்சிகள் உள்ளன. எனினும் துரதிர்ஷ்டவசமாக, சில ஏற்பாடுகள் அதிருப்தியை ஏற்படுத்துகின்றன.

உண்மை, ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவை நிறுவுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை கவனிக்கும் அதேவேளையில், எந்தவொரு சட்டத்திற்கும் முன்னதாக நம்பிக்கையை உருவாக்குவதற்கு உள்ளடக்கிய பங்கேற்பு செயல்முறையின் முக்கியத்துவத்தை தமது குழு வலியுறுத்துவதாக ரீட்டா குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு எதிர்கால ஆணைக்குழுவும் சுயாதீனமாகவும், உள்ளடக்கியதாகவும், அர்த்தமுள்ளதாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் இருக்க வேண்டும், பாதிக்கப்பட்ட சமூகங்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய வேண்டும், முந்தைய நிலைமாறுகால நீதிச் செயல்முறைகளைக் கட்டியெழுப்ப வேண்டும் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான பாதைகளை வழங்க வேண்டும்.

காணி விடுவிப்பு தொடர்பான அரசாங்கத்தின் உறுதிமொழிகளை தாம் வரவேற்கும் நிலையில், ஆனால் வடக்கு மற்றும் குறிப்பாக நாட்டின் கிழக்கில் காணி அபகரிப்புகளில் அதிகரித்த பதற்றங்கள் கவலையை ஏற்படுத்துகின்றன.

எனவே சவால்களை எதிர்கொள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகத்துடன் இணைந்து செயற்படுமாறு ஈடுபடுமாறு இலங்கை அரசாங்கத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...