Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

‘இலங்கை மீதான தீர்மானங்களை நிறைவேற்ற சேகரிக்கப்படும் ஆதாரங்கள் UNHRC கொள்கைகளுக்கு எதிராவை’

T

The Leader Desk

பிப்ரவரி 28, 2024 • 1:41 PM

‘இலங்கை மீதான தீர்மானங்களை நிறைவேற்ற சேகரிக்கப்படும் ஆதாரங்கள் UNHRC கொள்கைகளுக்கு எதிராவை’   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வலியுறுத்தியுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, குறிப்பாக இலங்கை தொடர்பான தீர்மானங்களை நிறைவேற்றுவதற்காக சேகரிக்கப்படுகின்ற ஆதாரங்கள், மனித உரிமைப் பேரவை ஸ்தாபிக்கப்பட்ட கொள்கைகளுக்கு எதிரானவை என்றும் குறிப்பிட்டார்.
  • ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது கூட்டத்தொடர் கடந்த 26ஆம் திகதி ஆரம்பமானது.
  • இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் தீர்மானங்களை அரசாங்கம் நிராகரித்துள்ளதாகவும் இதன்போது அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.
எழுத்து அளவு:

வலியுறுத்தியுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, குறிப்பாக  இலங்கை தொடர்பான தீர்மானங்களை நிறைவேற்றுவதற்காக சேகரிக்கப்படுகின்ற ஆதாரங்கள், மனித உரிமைப் பேரவை ஸ்தாபிக்கப்பட்ட கொள்கைகளுக்கு எதிரானவை என்றும் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது கூட்டத்தொடர் கடந்த 26ஆம் திகதி ஆரம்பமானது. இந்நிலையில் நேற்றைய கூட்டத்தொடரில் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி உரையாற்றியிருந்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், “இலங்கை தற்போது கடுமையான தடைகளை எதிர்நோக்குகின்ற போதிலும், மக்களுக்கு பயனளிக்கக்கூடிய ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையுடன் இணைந்து முன்னெடுத்து வருகின்றது” எனக் குறிப்பிட்டார்.

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் தீர்மானங்களை அரசாங்கம் நிராகரித்துள்ளதாகவும் இதன்போது அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த தீர்மானங்களுக்காக ஏற்படுத்தப்பட்ட ஆதாரங்களைச் சேகரிக்கும் பொறிமுறையையும் அரசாங்கம் நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் இவ்வாறான பொறிமுறைகள் ஆக்கபூர்வமற்றவை என்பதுடன், அவை எதிர்மறையானவை என்றும் அலி சப்ரி குறிப்பிட்டிருந்தார்.

குறிப்பாக தீர்மானங்களை நிறைவேற்றுவதற்காக சேகரிக்கப்படுகின்ற ஆதாரங்கள், மனித உரிமைப் பேரவை ஸ்தாபிக்கப்பட்ட கொள்கைகளிற்கு எதிரானது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை, காசா எதிர்கொண்டுள்ள நெருக்கடி குறித்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அணுகுமுறை தொடர்பாகவும் அமைச்சர் அலி சப்ரி இதன்போது குறிப்பிட்டிருந்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...