Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

கவிஞர் தீபச்செல்வனிடம் TID விசாரணை

T

The Leader Desk

ஏப்ரல் 12, 2024 • 3:09 PM

கவிஞர் தீபச்செல்வனிடம் TID விசாரணை   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
  • அதேவேளை கடந்த 2024.02.10 அன்று கிளிநொச்சியில் நடைபெற்ற நா.யோகேந்திரநாதனின் "நீந்திக்கடந்த நெருப்பாறு" நூல் வெளியீட்டு விழாவின் ஒழுங்கமைப்பு யாருடையது?
  • நிகழ்வில் பங்கேற்றவர்கள் யார்?
  • போன்ற வினாக்களை முன்வைத்து, கடந்த 2024.04.11ஆம் திகதி, பரந்தனிலுள்ள ரி.ஐ.டி அலுவலக்த்தில் வைத்து கவிஞர் தீபச்செல்வன் இரண்டரை மணிநேர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எழுத்து அளவு:

விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அதாவது கிளிநொச்சி மாவட்டத்தில், தமிழ்த்தேசியக் கொள்கைநிலைப்பட்ட அரசியல் தளத்தில் இயங்கும் ஈழத்தின் இலக்கியப் படைப்பாளியான கவிஞர் தீபச்செல்வன் மற்றும், கரைச்சிப் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சண்முகராஜா ஜீவராஜா ஆகியோர் பயங்கரவாத குற்றத்தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கைத் தமிழரசு கட்சியின் செயற்பாடுகள், நிதிக் கையாள்கை, தமிழ்த்தேசிய நிகழ்வுகள் மற்றும் அரச எதிர்ப்பு போராட்டங்களை ஒழுங்கமைப்பவர்களின் விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்னிறுத்தி கடந்த 2024.04.04ஆம் திகதி கொழும்பில் உள்ள டி.ஐ.டி அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு மு.ப.10.00 மணி முதல் பி.ப.1.30 மணிவரையான மூன்றரை மணிநேரங்கள் சண்முகராஜா ஜீவராஜா அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அதேவேளை கடந்த 2024.02.10 அன்று கிளிநொச்சியில் நடைபெற்ற நா.யோகேந்திரநாதனின் "நீந்திக்கடந்த நெருப்பாறு" நூல் வெளியீட்டு விழாவின் ஒழுங்கமைப்பு யாருடையது? அந்த நூல் விடுதலைப்புலிகளை மீளுருவாக்கும் வகையில் எழுதப்பட்டதா? நிகழ்வில் பங்கேற்றவர்கள் யார்? நீங்கள் எதற்காக தலைமையேற்று நடாத்தினீர்கள்? போன்ற வினாக்களை முன்வைத்து, கடந்த 2024.04.11ஆம் திகதி, பரந்தனிலுள்ள ரி.ஐ.டி அலுவலக்த்தில் வைத்து கவிஞர் தீபச்செல்வன் இரண்டரை மணிநேர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...