Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

பாலஸ்தீன இலங்கை ஒற்றுமைக்கான செயற்குழு (SLCSP) வின் ஊடக அறிக்கை!

T

The Leader Desk

மே 11, 2021 • 10:22 AM

பாலஸ்தீன இலங்கை ஒற்றுமைக்கான செயற்குழு (SLCSP) வின் ஊடக அறிக்கை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இஸ்லாத்தின் மூன்றாவது புனிதத் தளமான ஜெருசலத்தில் உள்ள அல்-அக்ஸா பள்ளிவாசலில் ரமழான் தொழுகையில் ஈடுபட்டவர்கள் மீது இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் கடந்த வாரம் நடத்திய மிருகத்தனமான தாக்குதல்களை பலஸ்தீன இலங்கை ஒற்றுமைக்கான செயற்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது.
  • இந்த தாக்குதலினால் ரமழான் மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமை வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த 200 பலஸ்தீனிய வழிபாட்டாளர்கள் காயமடைந்தனர்.
  • சட்டவிரோத இஸ்ரேலிய குடியேற்றத் திட்டம், குறிப்பாக இனரீதியாக இலக்கு வைக்கப்பட்ட வெளியேற்றக் கொள்கையின் இனப்படுகொலை மற்றும் இன அழிப்பு ஆகியன மனிதகுலத்துக்கு ஆபத்தானது.
எழுத்து அளவு:

இஸ்லாத்தின் மூன்றாவது புனிதத் தளமான ஜெருசலத்தில் உள்ள அல்-அக்ஸா பள்ளிவாசலில் ரமழான் தொழுகையில் ஈடுபட்டவர்கள் மீது இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் கடந்த வாரம் நடத்திய மிருகத்தனமான தாக்குதல்களை பலஸ்தீன இலங்கை ஒற்றுமைக்கான செயற்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது. அதே நேரம் அருகிலுள்ள ஷேக் ஜர்ரா பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான பலஸ்தீன குடும்பங்களுக்கு எதிராக வலுக்கட்டாயமாக மற்றும் சட்டவிரோத இஸ்ரேலிய குடியேற்றங்களுக்கு வழிவகுப்பதற்காக சமீபத்திய சட்டவிரோத வெளியேற்ற முயற்சிகளை குழு கண்டிக்கிறது.

உலகளவில் ஒளிபரப்பப்பட்ட தகவல்களின் அடிப்படையிலும் பலஸ்தீனிலிருந்து வந்த தகவல்களின் அடிப்படையிலும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரும் பொலிசாரும் கடந்த வெள்ளிக்கிழமை பள்ளிவாசல் வளாகங்களுக்குள் கண்ணீர்ப்புகை, ஸ்டன் கையெறி குண்டுகளை வீசியதுடன் ரப்பர் தோட்டாக்களினால் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

இந்த தாக்குதலினால் ரமழான் மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமை வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த 200 பலஸ்தீனிய வழிபாட்டாளர்கள் காயமடைந்தனர். இந்த மனித உரிமைகள் மற்றும் கலாச்சார அட்டூழியத்துக்கு எதிராக SLCSP குழு தனது அச்சத்தையும் கண்டனத்தையும் வெளிப்படுத்துகிறது. புனித பள்ளிவாசல் மற்றும் வழிபாட்டாளர்கள் மீது இஸ்ரேலி படைகள் வெள்ளிக்கிழமை நடத்திய தாக்குதல், கடந்த 70 வருடங்களுக்கும் மேலாக இஸ்ரேல் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள பாலஸ்தீனிய பிரதேசங்களில் அதன் குடிமக்களுக்கு எதிராக மேற்கொண்ட அரச மிலேச்சத்தனத்தின் தொடர்ச்சியாக நான்காம் நாள் நடைபெற்றது.

சட்டவிரோத இஸ்ரேலிய குடியேற்றத் திட்டம், குறிப்பாக இனரீதியாக இலக்கு வைக்கப்பட்ட வெளியேற்றக் கொள்கையின் இனப்படுகொலை மற்றும் இன அழிப்பு ஆகியன மனிதகுலத்துக்கு ஆபத்தானது.

இஸ்ரேலின் இந்த காட்டுமிராண்டித்தனமான மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை கண்டிக்கும் பணியில் உலக சமூகத்துடன் இணைந்துகொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்திடம் SLCSP செயற்குழு அழைப்பு விடுக்கின்றது. மேலும் பலஸ்தீனத்தை இஸ்ரேல் தொடர்ந்து நிறவெறி பாணியில் ஆக்கிரமிப்பதை எதிர்த்து இலங்கை மக்களின் சீற்றத்தை வெளிப்படுத்துகிறது.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரிகள் ஆக்கிரமிப்பில் உள்ளவர்கள் தொடர்பாக சர்வதேச சட்டக் கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும், அல் அக்ஸா பள்ளிவாசலுக்கு முழுமையான மற்றும் தொடர்ச்சியான நுழைவை வழிபாட்டாளர்கள் உட்பட அனைத்து மக்களுக்கும் பாரம்பரிய நடைமுறைக்கு ஏற்ப எளிதாக்க வேண்டும் என்றும் SLCSP வலியுறுத்துகின்றது.

தீர்க்கப்படாத இந்த காலனித்துவ நெருக்கடியில் பலஸ்தீனத்தின் காலனித்துவ மக்களுக்கு அதன் பொறுப்புகளை நிறைவேற்ற ஐக்கிய நாடுகள் சபையை SLCSP குழு கேட்டுக் கொள்கின்றது.

Bimal Ratnayaka                                     

M. Fawzer Farook

இணைத் தலைவர் - SLCSP      பொதுச்செயலர் - SLCS

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...