Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

P2 P வழக்கை கல்முனை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது!

T

The Leader Desk

ஏப்ரல் 30, 2021 • 3:51 PM

P2 P வழக்கை கல்முனை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இன்று காலை கல்முனை நீதவான் நிதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளபட்ட வழக்கு விசாரணையில் பா.ம.உ ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ சுமந்திரன் ஆஜராகியிருந்தார்.
  • ஆகையினாலே அழைப்பானையினை பெற்ற சட்ட மாணவர் ஒருவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்றைய தினம் ஒரு மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார் .
  • குறித்த கட்டளையானது பிரதிவாதிகளை கேட்காமல் கொடுக்கப்பட்ட கட்டளை என்பதனால் மே மாதம் 18ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் .
எழுத்து அளவு:

இன்று காலை கல்முனை  நீதவான் நிதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளபட்ட வழக்கு விசாரணையில் பா.ம.உ ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ சுமந்திரன் ஆஜராகியிருந்தார்.

குறித்த வழக்கு தொடர்பாக அவர் தெரிவிக்கையில்.

கல்முனை நீதவான் இல்லாத சமயத்தில் ஒரு பதில் நீதவான் முன்னிலையில் அழைப்பானைகளை பெற்றிருக்கின்றார்கள் .

நீதவான் நீதிமன்றத்திற்கு இந்த விடயத்தை விசாரிப்பதற்கான எந்தவிதமான நியாயாதிக்கங்கள் கிடையாது.

ஆகையினாலே அழைப்பானையினை பெற்ற சட்ட மாணவர் ஒருவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்றைய தினம்  ஒரு மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார் .

அந்த மனுவினை நான் ஆதரித்து இருந்தேன் இதன்காராணமாக கல்முனை நீதவான் நீதிமன்ற நடவடிக்கைகளை இடை நிறுத்துமாறு ஒரு கட்டளை கொடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கட்டளையானது பிரதிவாதிகளை கேட்காமல் கொடுக்கப்பட்ட கட்டளை என்பதனால் மே மாதம் 18ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் .

அதன் பின் பிரதிவாதிகள் சமூகமளித்ததன் பின் குறித்த வழக்கை நீடிப்பதா இல்லையா என்பது தொடர்பாக தீர்மானம் எடுக்கப்படும் .

குறித்த தடையுத்தரவு மேன்முறையீட்டு நீதிமன்ற பதிவாளர் மூலம் கல்முனை நீதவான் நீதிமன்ற பதிவாளருக்கு அறிவிக்கப்பட்டதுடன் இன்று காலை தொலைநகல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

குறித்த வழக்கில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை சேர்ந்த,

பாராளுமன்ற உறுப்பினர்களான,

கோ.கருணாகரம்

இரா.சாணக்கியன்

த.கலையரசன்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான,

பா.அரியநேந்திரன்

சீ.யோகேஷ்வரன்                                                             

அ.நிதான்சன்

துணைச்செயலாளர்

இலங்கை தமிழ் அரசுக் கட்சி வாலிப முன்னணி

செ.கணேஷ் தமிழ்மாணவர் மீட்பு அணி தலைவர் அடங்களாக ஏழுபேருக்கு எதிராக கல்முனை பொலிசார் வழக்கு தாக்கல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3.jpg

1.jpg

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

P2 P வழக்கை கல்முனை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது! | Tamil Leader | We Lead the Nation