Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

IMF பிரதிநிதிகளை சந்தித்த நிதி இராஜாங்க அமைச்சர்

T

The Leader Desk

ஏப்ரல் 16, 2024 • 12:26 PM

IMF பிரதிநிதிகளை சந்தித்த நிதி இராஜாங்க அமைச்சர்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஒகாமுராவை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
  • அமெரிக்காவின் வொஷிங்டனில் நேற்று (15) ஆரம்பமான சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் அரையாண்டு மாநாட்டின் போது இந்த கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக குறிப்பிடப்படுகின்றது.
  • குறித்த சந்திப்பு தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க விடுத்துள்ள செய்திக் குறிப்பில், வேலைத்திட்டத்தின் ஆரம்பம் முதல் சர்வதேச நாணய நிதியம் செய்துள்ள சாதனைகளை தொடர வேண்டியதன் அவசியத்தை அவர்கள் இலங்கைக்கு நினைவுபடுத்தியதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

ஒகாமுராவை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

அமெரிக்காவின் வொஷிங்டனில் நேற்று (15) ஆரம்பமான சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் அரையாண்டு மாநாட்டின் போது இந்த கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக குறிப்பிடப்படுகின்றது.

அங்கு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா இதன்போது இலங்கைக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பு தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க விடுத்துள்ள செய்திக் குறிப்பில்,

வேலைத்திட்டத்தின் ஆரம்பம் முதல் சர்வதேச நாணய நிதியம் செய்துள்ள சாதனைகளை தொடர வேண்டியதன் அவசியத்தை அவர்கள் இலங்கைக்கு நினைவுபடுத்தியதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டில் சமீபத்திய சமூக-பொருளாதார முன்னேற்றங்கள் மற்றும் IMF திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பெரிய பொருளாதார கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களின் தொடர்ச்சியை உறுதி செய்வதற்கான அதிகாரிகளின் அர்ப்பணிப்பு ஆகியவை அங்கு கவனம் செலுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியனைச் சந்தித்துள்ளார்.

அங்கு சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மீளாய்வை முடிப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...