Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

வெளியிடப்படாத IMF ஆவணங்களை சுமந்திரனிடம் வழங்க ஜனாதிபதி இணக்கம்

T

The Leader Desk

மார்ச் 13, 2024 • 12:04 PM

வெளியிடப்படாத IMF ஆவணங்களை சுமந்திரனிடம் வழங்க ஜனாதிபதி இணக்கம்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வெளியிடுவதாக ஜனாதிபதியினால் அழைப்பு விடுக்கப்பட்ட கலந்துரையாடலில் கலந்துகொண்ட ஒரேயொரு எதிர்க்கட்சி உறுப்பினர் வாக்குறுதியைப் பெற்றுள்ளார்.
  • மார்ச் 11ஆம் திகதி இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், ‘எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், கட்சித் தலைவர் அல்லாத இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கலந்துகொண்டதாக ஜனாதிபதியின் பணியகம் தெரிவித்திருந்தது.
  • தொழில்நுட்ப உதவி அறிக்கைகள் (Technical Assistance Reports) IMFஇனால் அரசாங்கத்திற்கு வழங்கப்படுகின்றன.
  • அவற்றில்தான் முக்கியமான பரிந்துரைகள் வழங்கப்படுகின்றன.
எழுத்து அளவு:

வெளியிடுவதாக ஜனாதிபதியினால் அழைப்பு விடுக்கப்பட்ட கலந்துரையாடலில் கலந்துகொண்ட ஒரேயொரு எதிர்க்கட்சி உறுப்பினர் வாக்குறுதியைப் பெற்றுள்ளார்.

'சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் குறித்து விவாதிக்க, எதிர்க்கட்சித் தலைவர்களுடன் முக்கியமான கூட்டம்' என்று கூறி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் விடுக்கப்பட்டிருந்த கூட்டத்திற்கான அழைப்பை, முழு எதிர்க்கட்சியினரும் புறக்கணித்தனர்.

மார்ச் 11ஆம் திகதி இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், ‘எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், கட்சித் தலைவர் அல்லாத இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கலந்துகொண்டதாக ஜனாதிபதியின் பணியகம் தெரிவித்திருந்தது.

"நாங்கள் கவலைப்படும் பல பிரச்சினைகளை நான் எழுப்பினேன். தொழில்நுட்ப உதவி அறிக்கைகள் (Technical Assistance Reports) IMFஇனால் அரசாங்கத்திற்கு வழங்கப்படுகின்றன. அவற்றில்தான் முக்கியமான பரிந்துரைகள் வழங்கப்படுகின்றன. இது குறித்து நாட்டுக்கு அறிவிக்கப்படவில்லை. அவற்றை எனக்கு வழங்குவதாக ஜனாதிபதி இணங்கினார். எதிர்க்கட்சியில் உள்ள மற்ற கட்சித் தலைவர்கள் கோரினால், அவர்களுக்கும் வழங்கப்படும். அதனைப் பார்த்த பின்னரே இந்த வேலைத்திட்டத்திற்கு உதவ முடியுமா இல்லையா என்பதை கூற முடியும்” என, பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கலந்துரையாடலின் பின்னர் ஜனாதிபதி பணியகத்திற்கு முன்பாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த சுமந்திரன் எம்.பி, தான் கட்சி பிரதிநிதியாக அல்லாமல் ஜனாதிபதியின் தனிப்பட்ட அழைப்பின் பேரிலேயே இந்தக் கலந்துரையாடலில்  கலந்துகொண்டதாக தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...