Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

IMF பிரதிநிதிகளை அடுத்த வாரம் சந்திக்கும் சஜித் அணி

T

The Leader Desk

மார்ச் 13, 2024 • 2:14 AM

IMF பிரதிநிதிகளை அடுத்த வாரம் சந்திக்கும் சஜித் அணி   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
  • பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத் திட்டத்தின் 1120 ஆவது கட்டமாக, 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை கம்பஹா,தொம்பே,மல்வான மகா வித்தியாலயத்துக்கு வழங்கி வைக்கும் நிகழ்வில் நேற்று (12) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
  • இல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 5 - 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 25 வீத குழந்தைகள் எடை குறைந்த குழந்தைகள் என்பது தெரியவந்துள்ளது.
  • இந்நாட்டில் தாய்மார்கள், சிசுக்கள், குழந்தைகள் மற்றும் பாடசாலை பிள்ளைகளின் ஊட்டச்சத்து குறைபாடு நிலையை உடனடியாகப் போக்க சர்வதேச நாணய நிதியத்தின் விசேட ஒத்துழைப்பு வேலைத்திட்டம் தேவை.
எழுத்து அளவு:

சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத் திட்டத்தின் 1120 ஆவது கட்டமாக, 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை கம்பஹா,தொம்பே,மல்வான மகா வித்தியாலயத்துக்கு வழங்கி வைக்கும் நிகழ்வில் நேற்று (12) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

"இந்நாட்டில் சிசுக்கள், குழந்தை மற்றும் தாய்மார்களது ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளது. 2022 இல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 5 - 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 25 வீத குழந்தைகள் எடை குறைந்த குழந்தைகள் என்பது தெரியவந்துள்ளது.

“இதுபோன்ற இன்னும் பல புள்ளிவிவரங்கள் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருவதையும், தாய்மார்களும் குழந்தைகளும் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படக்கூடியவர்களாக மாறி வருவதையும் எடுத்துக்காட்டுகின்றன.

“அடுத்த சில நாட்களில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை ஐக்கிய மக்கள் சக்தி சந்திக்கவுள்ளது. இந்நாட்டில் தாய்மார்கள், சிசுக்கள், குழந்தைகள் மற்றும் பாடசாலை பிள்ளைகளின் ஊட்டச்சத்து குறைபாடு நிலையை உடனடியாகப் போக்க சர்வதேச நாணய நிதியத்தின் விசேட ஒத்துழைப்பு வேலைத்திட்டம் தேவை.

“சர்வதேச நாணய நிதியம் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் பிற நிதி நிறுவனங்களை ஒன்றிணைத்து ஒரு சிறப்பு நிதயத்தை நிறுவி, இந்த போசாக்கின்மை நிலையிலிருந்து விடுபட விசேட தேசிய வேலைத்திட்டமொன்று தேவை.

“ஊட்டச்சத்து குறைபாட்டின் வளர்ச்சி ஒரு தீய சுழற்சியை உருவாக்குதற்கு சமன். இது நாட்டின் உற்பத்தித் திறனில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

“அனைத்து அரச பாடசாலைளிகளிலும் அனைத்து மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கும் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். நாட்டின் எதிர்காலம் சிறுவர்கள் என்பதால் அவர்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்பட வேண்டும்" என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

IMF பிரதிநிதிகளை அடுத்த வாரம் சந்திக்கும் சஜித் அணி | Tamil Leader | We Lead the Nation