Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

IMF கலந்துரையாடல்: ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்த ஐமச

T

The Leader Desk

மார்ச் 10, 2024 • 6:21 AM

IMF கலந்துரையாடல்: ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்த ஐமச   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் விடுக்கப்பட்ட அழைப்பை, சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி நிராகரித்துள்ளது.
  • கொழும்பில் நேற்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க இதனைத் தெரிவித்தார்.
  • எவ்வாறாயினும், இவ்விடயம் தொடர்பில் கட்சியின் கருத்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் விடுக்கப்பட்ட அழைப்பை, சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி நிராகரித்துள்ளது.

கொழும்பில் நேற்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க இதனைத் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இவ்விடயம் தொடர்பில் கட்சியின் கருத்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் கடந்த முறை இலங்கைக்கு வந்திருந்தபோது எதிர்க்கட்சித் தலைவர், அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்ததைப் போன்று, இம்முறையும் அவர்களுடன் கலந்துரையாடத் தயாராக இருக்கிறார் என்று தெரிவித்த திஸ்ஸ அத்தநாயக்க, அவ்வாறில்லாமல் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அராங்கம் நடத்தும் நிகழ்ச்சி நிரலுக்கு இணங்கி, அவர்கள் அழைக்கும் கலந்துரையாடலில் கலந்து கொள்வதில் தமது கட்சிக்கு உடன்பாடு இல்லை என்றார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் முன்மொழிவுகள் தொடர்பில் அதன் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு, ஐமசவின் பொருளாதார விவகாரங்களின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டீ சில்வா, அண்மையில் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டுமெனவும், அதற்காக அனைத்து தரப்பினரின் கூட்டுப் பொறுப்புக்கூறல் அவசியம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...