Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை திறக்க திட்டம்! G.L. பீரிஸ்

T

The Leader Desk

ஜூலை 2, 2021 • 12:57 PM

குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை திறக்க திட்டம்! G.L. பீரிஸ்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நூறுக்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட 2,962 பாடசாலைகள் நாட்டில் உள்ளதாக கல்வி அமைச்சில் இன்று (02) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அமைச்சர் G.L.
  • சுகாதார தரப்பினரின் அனுமதியுடன் 100 மாணவர்களுக்கும் குறைவானோரைக் கொண்ட பாடசாலைகளை ஜூலை மாதத்திற்குள் திறப்பதற்கு கல்வி அமைச்சு முயற்சிப்பதாகவும் அமைச்சர் பேராசிரியர் G.L.
  • எனினும், இதற்கு முன்னர் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
  • நாட்டில் 2,42,000 ஆசிரியர்கள் உள்ளனர்.
எழுத்து அளவு:

நூறுக்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட 2,962 பாடசாலைகள் நாட்டில் உள்ளதாக கல்வி அமைச்சில் இன்று (02) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அமைச்சர் G.L. பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

முதற்கட்டமாக குறித்த பாடசாலைகளை திறப்பதற்கான திட்டத்தை செயற்படுத்த ​நேற்று ஜனாதிபதியுடன் நடைபெற்ற சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சுகாதார தரப்பினரின் அனுமதியுடன் 100 மாணவர்களுக்கும் குறைவானோரைக் கொண்ட பாடசாலைகளை ஜூலை மாதத்திற்குள் திறப்பதற்கு கல்வி அமைச்சு முயற்சிப்பதாகவும் அமைச்சர் பேராசிரியர் G.L. பீரிஸ் தெரிவித்துள்ளார்.

எனினும், இதற்கு முன்னர் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் 2,42,000 ஆசிரியர்கள் உள்ளனர். இந்நிலையில், அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை ஜனாதிபதி வழங்கியுள்ளதாகவும் கல்வி அமைச்சர் பேராசிரியர் G.L. பீரிஸ் கூறியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை திறக்க திட்டம்! G.L. பீரிஸ் | Tamil Leader | We Lead the Nation