Tamil Leader News
முக்கியம்
தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●
செய்திகள்

EPF, ETF மீதான 25 வீத மேலதிக வரி அறவிடப்படாது - பசில்

T

The Leader Desk

பிப்ரவரி 15, 2022 • 4:45 AM

  EPF, ETF மீதான 25 வீத மேலதிக வரி அறவிடப்படாது - பசில்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எனினும் வருடாந்தம் 2 பில்லியனுக்கும் அதிகமான வருமானம் ஈட்டும் நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் கூட்டு நிறுவனங்களினால் வரவு செலவுத் திட்டத்தில் 25 வீத மேலதிக வரி விதிக்க தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
  • ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பவற்றுக்கு 25 வீத மேலதிக வரி விதிக்க அமைச்சர்கள் பலரால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை கருத்திற் கொண்டு அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
  • அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, வாசுதேவ நாணயக்கார, கலாநிதி பந்துல குணவர்தன, தினேஷ் குணவர்தன, உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, மஹிந்த அமரவீர மற்றும் அமைச்சர்கள் பலர் இந்த மேலதிகக் கட்டணத்திற்கு எதிராக கருத்து வெளியிட்டுள்ளனர்.
எழுத்து அளவு:

எனினும் வருடாந்தம் 2 பில்லியனுக்கும் அதிகமான வருமானம் ஈட்டும் நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் கூட்டு நிறுவனங்களினால் வரவு செலவுத் திட்டத்தில் 25 வீத மேலதிக வரி விதிக்க தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட சட்டமூலத்தின் மூலம் வருங்கால வைப்பு நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம், ஓய்வூதிய நிதி என்பன நிறுவனங்களாக மாற்றப்பட்டுள்ளதாகவும், அதனை சரிசெய்ய உள்ளதாகவும் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பவற்றுக்கு 25 வீத மேலதிக வரி விதிக்க அமைச்சர்கள் பலரால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை கருத்திற் கொண்டு அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, வாசுதேவ நாணயக்கார, கலாநிதி பந்துல குணவர்தன, தினேஷ் குணவர்தன, உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, மஹிந்த அமரவீர மற்றும் அமைச்சர்கள் பலர் இந்த மேலதிகக் கட்டணத்திற்கு எதிராக கருத்து வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பான அமைச்சரவை தீர்மானங்களை நாட்டுக்கு விளக்கமளிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றில் முதலீடு செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு வரி விதிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு நாட்டின் முன்னணி தொழிற்சங்கங்கள் பலவும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...