Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

மூன்று COVID அலைகளின் போதும் அரசாங்கம் பொறுப்பற்ற வகையில் செயற்பட்டுள்ளது! ரஞ்சித் மத்தும பண்டார

T

The Leader Desk

மே 15, 2021 • 6:19 PM

மூன்று COVID அலைகளின் போதும் அரசாங்கம் பொறுப்பற்ற வகையில் செயற்பட்டுள்ளது! ரஞ்சித் மத்தும பண்டார

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மூன்று COVID அலைகளின் போதும் அரசாங்கம் பொறுப்பற்ற வகையில் செயற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • COVID வைரஸ் பிறழ்வுகள் நாட்டில் பரவுவதற்கான சந்தர்ப்பம் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்திருந்த நிலையில், அரசாங்கம் உக்ரைன் பிரஜைகளை அழைத்து வந்ததாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • அரசாங்கம் பெருந்தொற்று நிலைமை குறித்து எவ்வித கரிசனையும் இன்றி செயற்படுவதற்கு இந்த நடவடிக்கைகள் ஆதாரமாக அமைந்துள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

மூன்று COVID அலைகளின் போதும் அரசாங்கம் பொறுப்பற்ற வகையில் செயற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலாவது COVID அலை ஏற்பட்டிருந்தபோது அரசாங்கம் பொதுத்தேர்தலுக்கு வேட்புமனு கோரியதாகவும் இரண்டாவது அலை தொடர்பிலான சுகாதார தரப்பினரின் முன்னெச்சரிக்கையையும் பொருட்படுத்தாது 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

COVID வைரஸ் பிறழ்வுகள் நாட்டில் பரவுவதற்கான சந்தர்ப்பம் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்திருந்த நிலையில், அரசாங்கம் உக்ரைன் பிரஜைகளை அழைத்து வந்ததாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கம் பெருந்தொற்று நிலைமை குறித்து எவ்வித கரிசனையும் இன்றி செயற்படுவதற்கு இந்த நடவடிக்கைகள் ஆதாரமாக அமைந்துள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மூன்றாவது அலையில் முழு நாடும் சிக்கியுள்ள நிலையில், நாட்டின் இறைமைக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்காக எதிர்வரும் 19 ஆம் 20 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம், அரசாங்கத்தின் தான்தோன்றித்தனமான போக்கை எடுத்தியம்புவதாகவும் அதனை ஐக்கிய மக்கள் சக்தி வன்மையாகக் கண்டிப்பதாகவும் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...