இராஜாங்க அமைச்சர் டயனா கமகே மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடா பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹன

பண்டார மற்றும் சுஜித் சஞ்சய் பெரேரா ஆகியோரை, ஒரு மாத காலத்திற்கு நாடாளுமன்றத்தில் இருந்து தடை செய்யுமாறு, நாடாளுமன்ற நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் குழு பரிந்துரை செய்துள்ளது.

இது தொடர்பான முதலாவது அறிக்கை குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷவினால் இன்று (01) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் ஆராய பிரதி சபாநாயகரால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கைக்கும் இந்த அறிக்கைக்கும் முரண்பாடு இருப்பதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் எம்.பியுமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

பிரதி சபாநாயகர் குழு, இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவை 3 மாத காலத்திற்கு நாடாளுமன்றத்தில் இருந்து தடை செய்யுமாறு பரிந்துரை செய்திருந்த போதிலும், அறநெறிகள் மற்றும் சிறப்புரிமைகள் குழு அதனை ஒரு மாத காலத்திற்கு குறைத்துள்ளதாக சம்பவத்துடன் தொடர்புடைய நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார குற்றஞ்சாட்டினார்.

இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கேள்வி எழுப்பியபோது, அங்கு சர்ச்சையான சூழ்நிலை ஏற்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, சபைத் தலைவர் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த், நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல, நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார ஆகியோர் இது தொடர்பில் வாக்குவாதப்பட்டுக்கொண்டனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி