கண்டி மஹாமாயா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் சமாதி அனுராத ரணவக்க என்ற மாணவி 2022 (2023) கல்விப் பொதுச் சான்றிதழ்

பெறுபேறுகளின்படி நாடளாவிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி அக்ஷியா ஆனந்த ஸ்வானந்த் நாட்டிலேயே இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

கொழும்பு றோயல் கல்லூரி மாணவி ஹரித மின்சாது அழககோன் நாடளாவிய ரீதியில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற கடந்த ஆண்டுக்கான (2022) கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், யாழ் மாணவி ஒருவர் நாடளாவிய ரீதியில் இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளார்.

கண்டி மகாமாயா பெண்கள் பாடசாலையைச் சேர்ந்த மாணவி, நாடளாவிய ரீதியில் முதலாமிடத்தைப் பெற்றுள்ள நிலையில் யாழ் வேம்படி மகளிர் வித்தியாலய மாணவி நாடளாவிய ரீதியில் இரண்டாமிடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

நாட்டில் இம்முறை கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சையில் 13,588 மாணவர்கள் 09 'A' சித்திகளைப் பெற்றுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று (01) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும், இம்முறை பரீட்சைக்கு தொற்றியவர்களில் 72.07 வீதமானோர் உயர்தரத்திற்கு தகுதி பெற்றுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி