தேஷபந்து தென்னகோனின் புதிய நியமனமானது ஈஸ்டர் தினத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடந்த மிகப்பெரிய அவமானம் என

கொழும்பு பேராயர்களின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு தனது கருத்துக்களை முன்வைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு அவர், தேஷபந்துவின் நியமனத்தை புனித கர்தினால் அவமதிப்புடன் கண்டிப்பதாகவும் கூறியுள்ளார்.

மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தேஷபந்து தென்னகோன்  பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டதை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும், அந்த நியமனத்தை வன்மையாக நிராகரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்ட தேஷ்பந்து தென்னகோன் இன்றைய தினம் (30) உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பெறுப்பேற்றார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பதில் பொலிஸ் மா அதிபராக தேஷ்பந்து தென்னகோன் நியமிக்கப்பட்டதையடுத்து நேற்று (29) கொழும்பு ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரைக்கு சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டார்.

பொலிஸ் மா அதிபராக பணியாற்றிய சி.டி விக்ரமரத்ன தனது பதவியில் இருந்து ஓய்வு பெறும் நிலையில், பதில் பொலிஸ் மா அதிபராக தேஷபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை,தேஷபந்து தென்னகோன், மேல் மாகண சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபராக கடமையாற்றிய நிலையிலேயே இந்த புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி