2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதிக்கும் ஒக்டோபர் மாதம் 17ஆம்எதிகதிக்கும் இடைப்பட்ட ஒரு நாளில் அடுத்த

ஜனாதிபதித்எதேர்தல் நடைபெறும் என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.

தேர்தலுக்கான திகதி எதிர்வரும் ஜூலையில் முடிவு செய்யப்பட்டு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

“ஜனாதிபதித் தேர்தல் திகதியை முடிவு செய்யும் போது அரசமைப்பு மற்றும் ஜனாதிபதித் தேர்தல் சட்டம் ஆகிய இரண்டிலும் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள நடைமுறைகள் கண்டிப்பாகப் பின்பற்றப்படும்.

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்குத் தயாராகுவதற்குத் தேர்தல் பதிவேடு உருவாக்கம் உள்ளிட்ட அத்தியாவசிய நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

“வாக்குச்சீட்டுகளை அச்சிடுதல் மற்றும் பிற ஆவணப் பணிகள் போன்ற நடவடிக்கைகளுக்கான நிதியைப் பெற்றுக்கொள்ளல் போன்ற அடுத்தடுத்த பணிகள் வரும் ஆண்டில் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது” என்றார்.

நாடாளுமன்றத் தேர்தல் குறித்து கருத்து வெளியிட்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், “நாடாளுமன்றத் தேர்தல் 2025 ஆம்ஆண்டில் அரசமைப்பின்படி நடைபெறும். எனினும், 2024 ஆம் ஆண்டில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஜனாதிபதி, பதவியேற்றவுடன் நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை விரைவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன” என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி