இந்தியாவில் தன்பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கக் கோரிய மனு மீதான தீர்ப்பை  உச்ச நீதிமன்ற அரசியல் சாசன

அமர்வு இன்று அறிவித்துள்ளது.

தீர்ப்பை வாசிக்கும் முன்பு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறுகையில், ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றுள்ள நான்கு நீதிபதிகள் நான்கு விதமான தீர்ப்புகளை வழங்கவிருப்பதாகவும், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது என்று மத்திய அரசு நீதிமன்றத்தில் கூறியிருந்ததாகவும், நீதிமன்றம் சட்டத்தை உருவாக்க முடியாது, ஆனால் அதே நேரத்தில், சட்டத்தின் சரத்துகளைக் கையாள முடியும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும்,  திருமணம் தொடர்பான விவகாரத்தில் புதிய சட்டத்தை உருவாக்க நாடாளுமன்றத்தையோ சட்டப்பேரவைகளையோ கட்டாயப்படுத்த முடியாது. பல ஆண்டுகளுக்கு முன்பு மறுக்கப்பட்ட பல விஷயங்களை இன்று நாம் ஏற்றுக்கொள்கிறோம். பல ஆண்டுகளாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சாதி, குழந்தை திருமணம் போன்ற பல விஷயங்களை இன்று மறுக்கிறோம். சிறப்புத் திருமண சட்டம், அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று கருதினால் ஒரு முற்போக்கான சட்டத்தை இழக்க நேரிடலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

தன் பாலின திருமணங்களுக்கான சட்ட உரிமையை நீதிமன்றங்கள் தாமாக சேர்க்க முடியாது. சிறப்பு திருமண சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டுமா என்பதை நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு தெரிவித்தது. தன்பாலின உறவு என்பது நகர்புறறத்தைச் சேர்ந்தது என்ற கருத்து உண்மையல்ல என்றும் அரசியல் சாசன அமர்வு குறிப்பிட்டது.

மேலும், தன்பாலின திருமணங்களுக்கான சட்ட உரிமையை நீதிமன்றங்கள் தாமாக சேர்க்க முடியாது. சிறப்பு திருமண சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டுமா என்பதை நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது. திருமணம் என்பது நிலையானது, மாறாதது என்று சொல்வது தவறானது. சிறப்பு திருமண சட்டத்தை ரத்து செய்வது நாட்டை சுதந்திரத்துக்கு முந்தைய காலக்கட்டத்துக்குக் கொண்டு சென்றுவிடும் என்றும் நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

 
 

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி