முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகி நாட்டைவிட்டு சென்ற விவகாரத்தில், தமிழ் மக்களின்

எதிர்ப்பை காண்பிக்க போராட்டங்களை நடத்த தமிழ் தேசிய கட்சிகள் தீர்மானித்துள்ளன.

நேற்று (29) யாழ்ப்பாணத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி,ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடி இந்த முடிவை எடுத்தனர்.

இதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் 4 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மிகப்பெருமெடுப்பில் மனிதச்சங்கிலி போராட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மருதனார்மடத்திலிருந்து யாழ் நகர் வரை மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தப்படவுள்ளது.

பின்னர் முல்லைத்தீவை முடக்கி போராட்டம் நடத்தப்படவுள்ளது. இதற்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச நாடுகளின் கவனத்துக்கு இந்த விடயத்தை கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டது.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி