மொரோக்கோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 632 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 329 பேர்

காயமடைந்துள்ளதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 

மொரோக்கோவில் அந்நாட்டு நேரப்படி நேற்று நள்ளிரவு 11.11 மணிக்கு ரிக்டர் 6.8 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நள்ளிரவு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பலர் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் எனத் தெரிகிறது. மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து அப்பகுதியில் நடைபெற்று வருகிறது. 

அந்நாட்டின் தலைநகர் ரபாத் முதல் மாரகெச் வரை நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டிருப்பதாகவும், நாட்டில் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பகுதிகளிலும் பயங்கர பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக மொரோக்கோவின் உள்துறை அமைச்சகம் பலி எண்ணிக்கை 296 ஆக அறிவித்த நிலையில் தற்போது 632 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 329 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 
 

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி