இன்னும் மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு நாட்டில் தேர்தல்fள் எவையும் நடத்தப்படாது என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிப்பதை கட்டாயமாக்கி, வாக்களிக்காதவர்களுக்கு எதிராக அபராதம் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குருநாகலில் தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் 2026-2029 காலப்பகுதிக்கான மூலோபாய திட்டத்தை தயாரிப்பது தொடர்பாக குருநாகல் மாவட்ட கட்சி குழுக்களுடன் மாவட்ட தேர்தல் காரியாலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பாரியளவில் பணம் செலவிடப்படுவதைக் கருத்திற்கொண்டு, ஒரு தேர்தலின் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இவ்வாறான தீர்மானம் அமுல்படுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத் தேர்தலுக்கான வைப்புத்தொகையை அதிகரிப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.