நான்கு வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு உடல் உழைப்பு குறைபாடு காணப்படுவதால், வீட்டில் இருக்கும் போது பிள்ளைகளை "ஹூ" என்று சத்தமாகக்
கூச்சலிடுவதற்கு வாய்ப்பளிக்குமாறு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விளையாட்டு மற்றும் மருத்துவ ஆய்வுத் துறையின் சிரேஷ்ட வைத்தியர் புத்திக லொக்குகம்ஹேவா, பெற்றோர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், உடல் உழைப்பு இல்லாததால் சிறு குழந்தைகளுக்கு இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்றும் அவர் கூறினார்.
இந்த வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தினமும் சராசரியாக 180 நிமிடங்கள் உடல் செயல்பாடுகளில் ஈடுபட வாய்ப்பு அளிக்க வேண்டும். குழந்தையின் தூக்கம் எந்த நேரத்திலும் தடைபடக் கூடாது என்றும், குறைந்தபட்சம் குழந்தைகள் தினமும் 13 மணிநேரம் தூங்குவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் டாக்டர் கூறினார்.
குறிப்பாக இன்றைய நாட்களில் டிஜிட்டல் திரைகளுக்கு குழந்தைகள் அடிமையாகி வருவதால், சரியான தூக்கம் இல்லாத காரணத்தால் சிறு குழந்தைகள் அமைதியற்ற நடத்தையை வெளிப்படுத்தி வருவதாக அவர் வலியுறுத்தினார்.
தினமும் சுமார் அறுபது நிமிடம் குழந்தைகளுக்கு பல்வேறு செயல்களில் ஈடுபடும் வாய்ப்பை பெற்றோர்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் சிறு வயதிலிருந்தே இதுபோன்ற சுகாதார முறைகளை பின்பற்றி பழகினால் வயது முதிர்ந்த வயதில் ஏற்படும் நுரையீரல் சம்பந்தமான நோய்கள், இதய நோய்கள் வராமல் தடுக்கலாம் என்றும் மருத்துவர் கூறினார்.