இந்த வருடத்துக்கான நாய் கருத்தடை நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் 200 மில்லியன் ரூபாவை ஒதுக்கி 7 மாதங்கள் கடந்துள்ள போதிலும், இதுவரை
ஒரு நாய்க்குக் கூட சுகாதார அமைச்சினால் கருத்தடை செய்யப்படவில்லை என விலங்கு நல மன்றம் தெரிவித்துள்ளது.
இந்த பணத்தை உரிய முறையில் பயன்படுத்துவதற்கு ஏற்பாடு செய்யுமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளதாக அதன் செயற்குழு உறுப்பினர் கீதான் தனுஷ்க ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு (2024) நாய் கருத்தடை நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் 200 மில்லியன் ரூபாவை ஒதுக்கியிருந்த போதிலும் போதிய கால்நடை மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் 100 மில்லியன் ரூபாவே கருத்தடை நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கடந்த பத்து வருடங்களில் இந்த நாட்டில் தெரு நாய்களின் எண்ணிக்கை குறித்து குறிப்பிட்ட கணக்கெடுப்பு எதுவும் இல்லை என்றும், 20 முதல் 30 இலட்சம் நாய்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு எட்டு பேருக்கும் ஒரு நாய் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், தெருநாய்களுடன் மோதுண்டு மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகி உடல்ரீதியாக காயமடையும் சம்பவங்கள் ஏராளமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாய்களின் கர்ப்ப காலம் இரண்டு மாதங்களுக்கும் குறைவாக இருப்பதால், இந்த விலங்குகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அரசு முறையான திட்டத்தை தயாரிக்க வேண்டும் என்றார்.
“மேலும், நீர் வெறுப்பு நோய் பயத்தைக் கட்டுப்படுத்துவது சுகாதார அமைச்சகத்தின் கீழ் இருக்கக்கூடாது. மாறாக விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறையின் கீழ் இருக்க வேண்டும்.
“சுகாதாரம் மற்றும் சுகாதார அமைச்சின் கீழ் 20க்கும் குறைவான கால்நடை வைத்தியர்கள் உள்ளனர். கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் சுமார் நானூறு கால்நடை மருத்துவர்கள் உள்ளனர். நீர் வெறுப்பு நோய் பயத்தை கட்டுப்படுத்த, நாட்டில் உள்ள 80 சதவீத நாய்களுக்கு தடுப்பூசி போட வேண்டும்.
அரசு மற்றும் தனியார் துறைகளால் மேற்கொள்ளப்படும் தடுப்பூசி தொடர்பான தகவல் கோப்பு எதுவும் தற்போது இல்லை என்றும் 80 சதவீத விலங்குகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு, குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு கால்நடைகளுக்கு கருத்தடை செய்ய வேண்டும் என்றும் தனுஷ்க தெரிவித்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் அரசின் தலையீட்டில் சுமார் 30,000 கருத்தடை அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் தனியார் நிறுவனங்களால் 35,000 கருத்தடை அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள் தொடர்பில் விதிமுறைகள் அதிகரிக்கப்பட வேண்டுமெனவும், தெருநாய்களுக்கு கருத்தடை செய்தல் மட்டும் போதாது எனவும் சிலர் வீடுகளில் குட்டிகளை பிரசவித்த பின்னர் அவற்றை வெவ்வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்வதும் நாய்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் கிஹான் தனுஷ்க தெரிவித்தார்.
அண்மையில், விலங்குகள் நல மன்றம் கொழும்பு நகரை சுற்றி நாய்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான திட்டத்தையும் கொழும்பு மேயரிடம் வழங்கியது.
கொழும்பு நகரை அண்மித்த தெரு நாய்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதனால் புறநகர் பகுதிகளில் இருந்து வரும் சிலர் நாய்களை கைவிடுவதே காரணம் என அவர் தெரிவித்தா