பத்தரமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள அரசாங்கத்துடன் இணைந்த சுற்றுலா ஹோட்டலில், 70 ரூபாவிற்கு விற்பனை செய்யவேண்டிய குடிநீர்ப் போத்தல்
ஒன்று 400 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் நுகர்வோர் அதிகாரசபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
500 மில்லிலீற்றர் குடிநீர்ப் போத்தல் ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 70 ரூபாயாக இருந்தாலும், அதே அளவுள்ள இரண்டு குடிநீர் போத்தல்களுக்கு 800 ரூபாவை இந்த சுற்றுலா ஹோட்டல் அறவிட்டுள்ளது.
இது தொடர்பில் நுகர்வோர் அதிகார சபைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சம்பந்தப்பட்ட விலைப் பட்டியலில், போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் என குறிப்பிடப்பட வேண்டும் என்றாலும், இரண்டு குடிநீர் போத்தல்களும் மினரல் வாட்டர் என குறிப்பிடப்பட்டுள்ளன. இது தொடர்பில், நுகர்வோர் விவகார அதிகார சபையின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.