“விவசாயக் காணிகளில் ஹோட்டல்களோ அல்லது எந்தவொரு கட்டிடத்தையோ நிர்மாணித்திருந்தாலும், அவற்றை உடனடியாக அகற்றிக்கொள்ளுங்கள்.
இல்லாவிட்டால், யாராக இருந்தாலும் அவை அகற்றப்படும். அது டட்லி சிறிசேனவாக இருந்தாலும் சரி, எங்களுக்கு எவரும் பெரிதில்லை” என்று, விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
“அவர் நமக்கு அரிசி வழங்கும் துறையில் பெரியவர். அந்தத் துறையில் மதிப்பு மிக்கவர். மக்கள் அவரைத் திட்டினாலும், அந்த ஆள் இல்லை என்றால், நாம் கல்லைத்தான் கவ்வவேண்டி வரும். இலங்கை மக்களுக்கு ஒரு கல் கூட கிடைக்காத வகையில் அரிசியை சந்தைக்கு வழங்கியவர் டட்லி சிறிசேன. அந்த மனிதர் ஒரு வேலை செய்திருக்கிறார். ஒரு விலைமதிப்பற்ற மனிதன். ஆனால் அவரிடத்தில் எங்களுக்கு ஒரு பிரச்சினை உள்ளது.
“விவசாயிகளிடம் அரிசி வாங்கும் போது, சில சமயங்களில் விவசாயிக்கு உரிய விலை வழங்கவில்லை. கடந்த மாதத்திலிருந்து நாம் ஒரு நெல்லை 120 ரூபாய்க்கு வாங்குவோம் என்றோம். அவர், 130 முதல் 140 ரூபாய்க்கு வாங்கினர்.
“அடுத்ததாக, வாடிக்கையாளர் நெல்லை வாங்கிச் சாப்பிடுகிறாரா என்பதுதான் எங்களுக்குள்ள கேள்வியாக இருக்கிறது. நாம் தீர்க்க வேண்டிய பிரச்சினை அது மட்டுமே. இந்தச் சிக்கல் இல்லாவிட்டால், இந்த நாட்டிற்கான குறிப்பிடத்தக்க தேசிய பொறுப்பை நிறைவேற்றியவர் அவர். அந்த மரியாதை கொடுக்கப்பட வேண்டும்” என்றார் அமைச்சர்.
“அநுராதபுரம், நுவரவெவ, கந்தளாய்க் குளம், கிரித்தலே குளம், புத்தளம் தப்போவ குளம், வாரியபொல தெதுரு ஓயா நீர்த்தேக்கம், பொலன்னறுவை மின்னேரிய குளம், ஹம்பாந்தோட்டை திஸ்ஸ ஏரி உள்ளிட்ட 22 ஏரிகளின் இருப்பு எல்லைகள் குறிக்கப்பட உள்ளன. அதன்படி நேற்று முன்தினம் (19) முதல், அதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அநுராதபுரத்தில் உள்ள ஏரி எல்லையில் உள்ள சட்டவிரோத நிர்மாணங்கள் தொடர்பில் குழுவொன்று ஆராய்ந்து அந்த நிர்மாணங்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் என நீர்ப்பாசன மற்றும் காணி பிரதியமைச்சர் கலாநிதி சுசில் ரணசிங்க தெரிவித்தார்.