ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் நேபாள அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி 238 ஓட்டங்களால் வெற்றி

பெற்றது.

நாணயசுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 342 ஓட்டங்களை எடுத்தது.

சிறப்பான துடுப்பாட்டத்தில் ஈடுபட்ட அணியின் தலைவர் பாபர் அசாம் 131 பந்துகளில் 04 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளுடன் 151 ஓட்டங்களை குவித்தார்.

இப்திகார் அகமது ஆட்டமிழக்காமல் 109 ஓட்டங்களையும், முகமது ரிஸ்வான் 44 ஓட்டங்களையும் பெற்றனர்.

பின்னர் 343 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களம் இறங்கிய நேபாள அணி 23.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 104 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. 

பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சாா்பில் Shadab Khan 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி