இன்று (28) பிற்பகல் நடத்தப்படவுள்ள போராட்டம் தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

இன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், நிதியமைச்சு மற்றும் மத்திய வங்கி ஆகியவற்றிற்குள் சில ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரவேசிப்பதைத் தடுக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி துமிந்த நாகமுவ, முஜிபுர் ரஹ்மான், ஹிருணிகா பிரேமச்சந்திர, சரித ஹேரத், வாசுதேவ நாணயக்கார, ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 24 பிரதிவாதிகள் மற்றும் அவர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவுள்ளவர்களுக்கு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

ETF, EPF கொள்ளை மற்றும் அநியாய வரி விதிப்புக்கு எதிராக கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக போராட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி