உரிமம் பெற்ற வணிக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் அனைத்து வட்டி வீதங்களை ஓகஸ்ட் 25 ஆம் திகதி முதல் குறைக்க மத்திய

வங்கி உத்தரவிட்டுள்ளது. 

அடமான வட்டி வீதங்கள், கடன் வட்டி வீதங்கள், கடனட்டை வட்டி வீதங்கள்போன்றவற்றின் வட்டி வீதங்களை குறைக்க இதன் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கான வட்டி வீதத்தை பேணுவது தொடர்பான சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

1949 ஆம் ஆண்டின் பணச் சட்டம் எண் 58 இன் கீழ் வெளியிடப்பட்ட உத்தரவின் ஊடாக வட்டி வீதங்கள் தொடர்பான வழிகாட்டல்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

சராசரி கடன் வட்டி வீதத்தை 13.5 சதவீதமாக பேணுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அடமான வட்டி விகிதம் 18 சதவீதமாகவும், கடனட்டை வட்டி விகிதம் 28 சதவீதமாகவும் பராமரிக்கப்படும் என்று உரிமம் பெற்ற வங்கிகளுக்கு இதன் மூலம் தெரிவிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 
 

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி