Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

ஒரு வருடத்தில் 900 புற்றுநோய் குழந்தைகள்

T

The Leader Desk

பிப்ரவரி 4, 2024 • 5:36 PM

ஒரு வருடத்தில் 900 புற்றுநோய் குழந்தைகள்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சிறுவர் மருத்துவமனையின் குழந்தைகள் நல நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
  • ஒரு வருடத்தில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை இதற்கு முன்னர் 450 ஆக இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
  • நோய்களில் இருந்து விடுபட குழந்தைகளை இனிப்பு பானங்கள் மற்றும் சிற்றுண்டிகளில் இருந்து விலக்கி வைப்பது முக்கியம் என்றும் குறிப்பாக குழந்தைகளுக்கு இரண்டு வருடங்கள் தாய்ப்பால் கொடுப்பது புற்றுநோயில் இருந்து விடுபட நல்ல வழி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
  • நாட்டில் நாளாந்தம் 106 புதிய புற்றுநோயாளிகள் கண்டறியப்படுவதாக புற்றுநோய் நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எழுத்து அளவு:

சிறுவர் மருத்துவமனையின் குழந்தைகள் நல நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

ஒரு வருடத்தில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை இதற்கு முன்னர் 450 ஆக இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

கையடக்கத் தொலைபேசிக்கு அடிமையாவதன் காரணமாக உடல் உழைப்பு இல்லாததும் புற்றுநோய் உள்ளிட்ட தொற்றாத நோய்கள் அதிகரிப்பதற்கு ஒரு காரணம் என தெரிவித்த விசேட வைத்திய நிபுணர், இன்று சிறுவர்களிடையே இரத்தப் புற்றுநோய், மூளைப் புற்றுநோய்கள் பெருமளவில் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார்.

நோய்களில் இருந்து விடுபட குழந்தைகளை இனிப்பு பானங்கள் மற்றும் சிற்றுண்டிகளில் இருந்து விலக்கி வைப்பது முக்கியம் என்றும் குறிப்பாக குழந்தைகளுக்கு இரண்டு வருடங்கள் தாய்ப்பால் கொடுப்பது புற்றுநோயில் இருந்து விடுபட நல்ல வழி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் நாளாந்தம் 106 புதிய புற்றுநோயாளிகள் கண்டறியப்படுவதாக புற்றுநோய் நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று இடம்பெற்றுள்ள உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இவ்வருடத்தில் மாத்திரம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் கடந்த 3 தசாப்தங்களில் உலகெங்கிலும் 50 வயதுக்குட்பட்டவர்களிடையே புதிதாகப் பதிவாகியுள்ள புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 80 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...