Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

முறிகண்டி விபத்தில் இராணுவ வீரர் பலி: மேலும் 9 பேர் காயம்

T

The Leader Desk

ஏப்ரல் 26, 2024 • 5:13 AM

முறிகண்டி விபத்தில் இராணுவ வீரர் பலி: மேலும் 9 பேர் காயம்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உயிரிழந்துள்ளதுடன் மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர்.
  • முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இன்று (26) காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளதுடன், 9 பேர் காயமடைந்துள்ளனர்.
  • குறித்த சம்பவம் காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
  • முறிகண்டி வசந்தநகர் சந்தியின் A9 வீதியில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.
எழுத்து அளவு:

உயிரிழந்துள்ளதுடன் மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இன்று (26) காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளதுடன், 9 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. முறிகண்டி வசந்தநகர் சந்தியின் A9 வீதியில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து யாழ். நோக்கி பயணித்த பார ஊர்தியை, அதே திசையில் பயணித்த இராணுவ கெப் வாகனம் முன் நோக்கி முற்பட்டுள்ளது.

இதன்போது குறித்த கப் வாகனம் திடிரென இயங்காமல் நின்றுள்ளது. எதிரே வந்த வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி விடும் எனும் அச்சத்தில் விபத்தை தருக்கும் நோக்குடன் சாரதி பாரஊர்தியை செலுத்த முற்பட்டுள்ளார்.

இதன்போது, கப் வாகனத்தில் பாரஊர்தி மோதியதில் அதில் பயணித்த இரண்டு இராணுவ வீரர்கள் வீதியில் விழுந்துள்ளனர்.

அதில் ஒருவர் மேல் பாரஊர்தி ஏறியதில் குறித்த இராணுவ வீரர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

இதேவேளை சம்பவத்தில் காயமடைந்தவர்கள், இரணைமடுவில் உள்ள இராணுவ வைத்தியசாலையிலும் கிளிநொச்சி வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

01 WhatsApp Tamil 350

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...