Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

9வது நாடாளுமன்றத்தின் 5ஆவது கூட்டத்தொடர் இன்று: பொதுத் தீர்மானத்தில் ஐமச, உத்தரலங்கா கட்சிகள்

T

The Leader Desk

பிப்ரவரி 7, 2024 • 4:39 AM

9வது நாடாளுமன்றத்தின் 5ஆவது கூட்டத்தொடர் இன்று: பொதுத் தீர்மானத்தில் ஐமச, உத்தரலங்கா கட்சிகள்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
  • அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய ஜனாதிபதி இன்று காலை 10.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைக்கவுள்ளார்.
  • ஜனாதிபதியினால் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரை நிகழ்த்தப்பட்டதன் பின்னர் சபை நடவடிக்கை நாளை முற்பகல் 9.30 வரை ஒத்திவைக்கப்படவுள்ளது.
  • ஆவது நாடாளுமன்றத்தின் 05ஆவது அமர்வு, இன்று (07) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.
எழுத்து அளவு:

ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

இந்நிலையில், இந்த ஆரம்ப விழாவை புறக்கணிக்க, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் உத்தர லங்கா கூட்டமைப்பு கட்சிகள் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய ஜனாதிபதி இன்று காலை 10.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைக்கவுள்ளார்.

ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கமைய, அவரது வருகையின் போது, மரியாதை வேட்டுக்கள் தீர்த்தல் மற்றும் வாகனத் தொடரணி என்பன இடம்பெறமாட்டாது என நாடாளுமன்ற படைக்கலச் சேவிதர் குஷான் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியினால் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரை நிகழ்த்தப்பட்டதன் பின்னர் சபை நடவடிக்கை நாளை முற்பகல் 9.30 வரை ஒத்திவைக்கப்படவுள்ளது.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரை வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கும் நிகழ்வில் வெளிநாட்டு இராஜதந்திரிகள், பிரதம நீதியரசர், சட்டமா அதிபர் உள்ளிட்ட விசேட விருந்தினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர் என படைக்கல சேவிதர் குஷான் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிக்க உத்தர லங்கா கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கூடித் தீர்மானித்ததாக, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்று காலை 9.45 மணிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சித் தலைவர்களின் அவசரக் கூட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு விடுத்துள்ளதாகவும், இன்று நாடாளுமன்றத்தை திறப்பதற்காக ஜனாதிபதி அமர்வுக்கு வரும்போது, தமது ஆசனங்களில் இருந்து எழுந்து செல்வது குறித்து தீர்மானிக்கவுள்ளதாக, அக்கட்சியின் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், ஐமச கூட்டணியின் மற்ற சிறு கட்சிகள் அத்தகைய முடிவில் அதிக ஆர்வம் காட்டவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

9ஆவது நாடாளுமன்றத்தின் 05ஆவது அமர்வு, இன்று (07) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பமாகவுள்ளது. இன்று முற்பகல் 10.30 மணிக்கு ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு தலைமை தாங்கும் போதே, அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தை ஜனவரி 26ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒத்திவைத்தார். இதன்படி, இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் மீதான ஒத்திவைப்புவேளை விவாதம், நாளை மற்றும் நாளை மறுதினம் 8ஆம் மற்றும் 9ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

எவ்வாறாயினும், இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற திறப்பு விழாவை மிகக் குறைந்த செலவில் எளிமையாகவும் நேர்த்தியாகவும் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிகழ்வில் மரியாதை அணிவகுப்பு, மரியாதைக் காட்சிகள், ஊர்வலங்கள் போன்ற எந்த அம்சங்களும் இடம்பெறவில்லை என ஆளும் கட்சியின் பிரதான கொறடாவான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

காலை 10.25 மணிக்கு எம்.பி.க்கள் அவையில் அமர உள்ளனர். முற்பகல் 10.30 மணியளவில் ஜனாதிபதி அவைக்குள் பிரவேசித்து, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் சபையில் பிரகடனத்தை வாசித்த பின்னர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரையாற்றுவார்.

ஜனாதிபதி உரையாற்றிய பின்னர், பெப்ரவரி 8ஆம் திகதி காலை 9.30 மணி வரை நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து இன்றையதின நடவடிக்கைகளை முடிப்பார் என குறிப்பிடப்படுகின்றது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...