பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமை இல்லாது போயுள்ளதாக எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார்.

கடந்த ௦7 ம் திகதி வெள்ளிகிழமை  பாராளுமன்ற அறிக்கையின் படி 2020 ஆம் ஆண்டில் முதல் 15 நாட்களில் பாலியல் தொடர்பான 142 முறைப்பாடுகளும்,பாரதூரமான பாலியல் சம்பவங்கள் 42 உம் சிறுவர் துஸ்பிரயோகம் 54 உம் பதிவாகியுள்ளதாக தெரிய வருகின்றது.

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் அறிக்கையில் 78 பாலியல் தூண்டுதல்கள் 21 கடுமையான பாலியல் வன்புணர்வுகளும் சிறுவர் துஸ்பிரயோகம் 34 உம் அடங்குவதாக எதிர்க்கட்சித்தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று (19) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் போது இவ்வாறு கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சி தலைவர்

2015 ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2019 ம் ஆண்டு பாலியல் தொந்தரவுகள் மற்றும் பாலியல் வன்புணர்வுகள் 17.7% சிறுவர் துஸ்பிரயோகம் 27.6% இருந்தது. அனால் 2020 முதல் 15 நாட்களில் நடந்திருக்கும் சம்பவத்தை வைத்து பார்க்கும்பொழுது இது கூடுதலான அதிகரிப்பை சுட்டி நிற்கின்றது.

பொலிசார் வெளியிட்டிருக்கும் அறிக்கையின் 2020.02.17 தினத்திற்குள் பாலியல் துஸ்பிரயோகம் பாலியல் வன்புணர்வுகள் 06 ஆக காணப்படுகின்றது.

எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா பெண்களுக்கும் சிறுவர்களுக்குமான உரிய பாதுகாப்பு நடவடிக்கை மிக விரைவாக ஏற்படுத்துமாறு இந்த அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றேன் என்று கூறினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி