எதிர்காலத் தலைவர்களை உருவாக்கும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தலைமைத்துவக் குழுவொன்றை (உயர் பதவிக் குழு)

அமைக்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

இரண்டாம் நிலை தலைவர்களை உருவாக்குவது மற்றும் ஜனாதிபதியின் பல கடமைகள் காரணமாக கட்சி விவகாரங்களில் அதிக நேரத்தை செலவிட முடியாதது என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

கடந்த வாரம் கட்சி சிரேஷ்டர்கள் முன்னிலையில் ஜனாதிபதி விக்கிரமசிங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்கால தலைமைத்துவம் தொடர்பில் தேவையற்ற பிரச்சினை ஏற்படாத வகையில் இந்த தலைமைத்துவ சபையை நியமிக்க தீர்மானம் எடுக்கப்படும் என ஜனாதிபதி விக்ரமசிங்க கட்சி சிரேஷ்டர்களிடம் தெரிவித்துள்ளார்.

சம அதிகாரம் கொண்ட தலைமைத்துவ சபையை நியமிப்பதன் மூலம் உண்மையான தலைவர்கள் முன்வர முடியும் எனவும் அவ்வாறு செய்ய முடியாதவர்கள் பின்வாங்க நேரிடும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அந்த விடயத்தை இலக்காகக் கொண்டு ஜனாதிபதி விக்ரமசிங்க இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதுடன் ஆகஸ்ட் மாத நடுவாரத்தில் நடைபெறவுள்ள கட்சி மாநாட்டில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி