அரசியலமைப்பின் 121 (1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்ட ´ஊழல் எதிர்ப்பு´ எனும்
சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தனக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (06) சபையில் அறிவித்தார்.

´ஊழல் எதிர்ப்பு´ எனும் சட்டமூலம் அரசியலமைப்புக்கு உட்பட்டதா என்பது தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் கீழ்வருமாறு,

சட்டமூலத்தின் 1, 2(1)(f), 2(2), 3(2), 4(1)(a), 4(1)(b), 4(3), 17(1), 21, 31(2), 163(2)(h), 40, 48(3), 49(1)(f), 50(1)(a), 53(1), 62(1), 65, 67(5), 71(6) மற்றும் (80, 93, 99, 101, 112, 149 மற்றும் 162 ஆகிய வாசகங்கள் அரசியலமைப்புக்கு ஒத்திசைவாகாது. எவ்வாறாயினும், உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள திருத்தங்கள் சட்டமூலத்தில் மேற்கொள்ளப்படுமாயின் இந்த ஒத்திசைவாகாத தன்மை இல்லாமல்போய்விடும்.

இந்தத் திருத்தங்களுக்கு மேலதிகமாக, உயர்நீதிமன்றத்தினால் குறிபிடப்பட்டிருப்பதாவது, சட்டமூலத்தின் 8(3), 136, 141, 142 மற்றும் 156 வாசகங்கள் தொடர்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலினால் குறிப்பிடப்பட்ட திருத்தங்கள் மூலம் மனுதாரர்களினால் முன்னிலைப்படுத்தப்பட்ட விடயங்களுக்குத் தீர்வுகாண முடியும் என்றும் சபாநாயகர் தனது அறிவிப்பில் சுட்டிக்காட்டினார்.

அதேநேரம், அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் ´மாகணசபை தேர்தல்கள் (திருத்தம்)´ எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்கு ஆற்றுப்படுத்தப்பட்ட மனு மீதான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு கிடைத்திருப்பதாகவும் சபாநாயகர் சபையில் அறிவித்தார்.

சட்டமூலத்தின் 3 ஆம் வாசகத்தினை திருத்துவதற்கும் மற்றும் 4ஆம் வாசத்தின் நீக்குவதற்குமான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உட்பட்டு சட்டமூலமோ அல்லது அதன் எந்த ஏற்பாடுகளுமோ அரசியலமைப்பக்கு ஒவ்வாதனவாகவிராது என உயர் நீதிமன்றம் தீர்மானித்திருப்பதாகவும் சபாநாயகர் இதன்போது குறிப்பிட்டார்.

அத்துடன், இலங்கை கடற் பரப்பில் நிகழ்ந்த நியூ டயமன்ட் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ள் ஆகிய கப்பல்களின் விபத்துகள் தொடர்பாக ஆராய்ந்து தேவையான விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவில் பணியாற்றுவதற்காக டொக்டர். ரமேஷ் பதிரணவின் தலைமையிலான குழுவுக்கான உறுப்பினர்களையும் சபாநாயகர் சபையில் அறிவித்தார்.

இதற்கு அமைய இந்த விசேட குழுவின் உறுப்பினர்களாக கலாநிதி. சுரேன் ராகவன், திருமதி. டயனா கமகே, பேராசிரியர். ஜீ.எல். பீரிஸ், சட்டத்தரணி ரஊப் ஹகீம், விஜித ஹேரத், கலாநிதி. சரத் வீரசேக்கர, நிரோஷன் பெரேரா, அஜித் மான்னப்பெரும, நிமல் லான்சா, துஷார இந்துனில் அமரசேன, டொக்டர். கவிந்த ஹேஷான் ஜயவர்தன, அகில எல்லாவல, நாலக பண்டார கோட்டேகொட, சட்டத்தரணி மதுர விதானகே ஆகியோர் நியமிக்கப்பட்டிருப்பதாக சபாநாயகரின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு மேலதிகமாக பாராளுமன்ற நிலையியற் கட்டளை 111 இன் ஏற்பாடுகள் மற்றும் 2022 நவம்பர் 21 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணை என்பனவற்றிற்கு அமைவாக நியமிக்கப்பட்ட அந்தந்த துறைசார் மேற்பார்வைக் குழுக்களில் பணியாற்றுவதற்காக பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.

அத்துடன், வங்கித்தொழில் மற்றும் நிதிச் சேவைகள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காக கௌரவ மிலான் ஜயதிலக்க தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் சபையில் அறிவித்தார்.

இதேவேளை, ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவில் கடமையாற்றுவதற்கு ஜோன்ஸ்டன் பர்னாந்து, ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் திருமதி. சட்டத்தரணி தலதா அதுகோரல ஆகியோர் தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.
 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி