மலையகப் பகுதியில் முன்னெடுக்கப்படுகின்ற மலையக மக்கள் நலன் திட்டங்கள் தொடர்பாக ஆராய்வதற்கும் தேவையான
உதவிகளை தொடர்ந்தும் பெற்று தருவதற்கும் அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் ஜூலி சங் நேற்று (05) கொட்டகலைக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டதாக பிரிடோ நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மைக்கல் ஜோக்கிம் தெரிவித்தார்.

அமெரிக்க தூதுவரின் கொட்டகலை விஜயம் குறித்து மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், கடந்த 30 வருடங்களுக்கு மேலாக பிரிடோ நிறுவனம் மலையக மக்கள் கல்வி சுகாதாரம் பொருளாதாரம் அரசியல் ரீதியான செயற்பாடுகள் உள்ளிட்ட பல விடயங்களுக்கு பாரிய அர்ப்பணிப்பினை செய்து வருகிறது.

இந்த செயல் திட்டங்களில் ஒரு சிலவற்றிக்கு அமெரிக்க நிறுவனங்களினாலும் அமெரிக்க தூதரகத்தினாலுமே நிதியுதவி வழங்கப்படுகின்றன.

குறித்த திட்டங்கள் எவ்வாறு நடபெறுகின்றன. இவற்றினால் மக்கள் பெற்றுள்ள நன்மைகள் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பிரிடோ நிறுவனத்தினால் தோட்டங்களில் ஆரம்பித்துள்ள கிராம அபிவிருத்தி சங்கங்கள் எப்படி பலப்பட்டிருக்கின்றன.

எவ்வாறு கீழ் மட்ட தலைமைத்துவம் வளர்ந்திருக்கின்றது. எவ்வாறு கிராம அபிவிருத்தி சங்கங்கள் தாங்களாகவே அபிவிருத்தி திட்டங்கள் தயாரித்து பிரதேச சபைகள் பிரதேச செயலகங்கள் ஏனைய அரச நிறுவனங்களில் பரிந்துரை செய்து தங்களுடைய உரிமைகளை அபிவிருத்திகளை பெற்றுக்கொள்கிறார்கள் என்பதனை அவருக்கு எடுத்துரைக்க கூடியதாக இருந்தது.

விசேடமாக மலையகப் பகுதியில் அதிகரிக்கப்பட்டுள்ள பிரதேச சபைகள் மற்றும் பெண்கள் பிரதி நிதித்துவம் போன்ற விடயங்கள் தொடர்பாக மலையக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பாகவும் தூதுவர் அவர்களை தெளிவுப்படுத்த கூடியதாக இருந்தது.

விசேடமாக பிரிடோ நிறுவனம் 300 முன்பள்ளிகளையும் 350 பாலர் பாடசாலை ஆசிரியர்களையும் கொண்டு நடத்தும் ஒரு நிறுவனமாக இருப்பதனாலும் அதற்கு அப்பால் கிராம அபிவிருத்தி சங்கங்கள் ஊடாகவும் பெரும்பாலான மக்களை முறையாக அணி திரட்ட கூடியதாக இருப்பதனால் எங்களுக்கு பெதிருரிதும் பலம் சேர்த்க்கிறது என்பதனை அவர்களுக்கு சொல்லக் கூடியதாக இருந்தது.

அதேநேரம் கொரோனா தொற்று பரவல் காரணமாக பாலர் பாடசாலைகளை கொண்டு நடத்துவதற்கு ஏற்பட்ட சவால்களையும் மலையகத்தில் உயர் கல்வி, தொழில் கல்வி போன்ற விடயங்கள் பல்கலைக்கழகம் சென்றிருக்கின்ற மாணவர்களை பல்கலைகழகத்தில் வைத்திருக்க வேண்டிய தேவை போன்ற விடயங்கள் சுட்டிக் காட்டப்பட்டதுடன் காணியுரிமை, வீட்டுரிமை, அரச சேவைகள் பெற்றுக்கொள்ள வேண்டிய உரிமை போன்றவைகளையும் நாங்கள் சுட்டிக் காட்டி எதிர்காலத்தில் அவர்கள் வழங்குகின்ற உதவிகள் மூலமாக இவற்றை நாம் அடையக்கூடியதாக இருக்கும்.

என்றும் இதுவரை காலம் வழங்கிய உதவியின் காரணமாக ஏற்பட்ட அபிவிருத்திகளையும் அவருக்கு தெளிவாக எடுத்துக் காட்டினோம் அந்த விடயங்கள் தொடர்பாக அவர் மகிழ்ச்சியினையும் வெளிப்படுத்தினார் என அவர் மேலும் தெரிவித்தார்.

-மலையக நிருபர் சுந்தரலிங்கம்-

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி