18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரிக் கோப்பு ஒன்றைத் திறப்பதன் ஊடாக அவர்களிடம் இருந்து வரி அறவிடப்படும் என்ற அர்த்தம்
இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இந்த வரிக் கோப்பு இலக்கத்தின் கீழ் எதிர்கால நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்பட உள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2023 வரவு செலவு திட்டத்தில் நம் நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களுக்கும் வரிக் கோப்பு திறக்கப்படும் என்று ஒரு முன்மொழிவு இருந்தது.

இதன் பொருள் அரசாங்கம் இவர்கள் அனைவரிடமிருந்தும் வரிப் பணத்தை வசூலிக்கப் போகிறது என்று அர்த்தமல்ல என அவர் தெரிவித்துள்ளது.

அரச வருமானத்திற்கு சில கட்டுப்பாடுகளை கொண்டு வருவதற்காகவே எல்லோரையும் பதிவு செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

சிலருக்கு பதிவு செய்து அந்த கோப்பில் உள்ள தகவலின் படி அரசாங்கம் கொடுக்கும் உதவிகள் அவருக்கு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி