உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் தோன்றிய தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயத்தை காரணம் காட்டி சிலர் அதிகாரத்திற்கு வருவதற்கு முயன்ற போதிலும் தற்போது

கிடைத்திருக்கும் தகவல்களுக்கு அமைய அவ்வாறானவர்கள் இந்த தாக்குதலின் பின்னணியில் இருந்துள்ளார்களா என்ற சந்தேகம் கத்தோலிக்க மற்றும் கிறிஸ்த்தவ சமூகத்திடம் தோன்றியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூலம் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக அரசியல் இலாபத்தைப் பெற்றுக் கொள்வதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளும் அவர்களது கடும் வெறுப்புக்கு காரணமாக அமைந்துள்ளன.

கத்தோலிக்க மற்றும் கிறிஸ்த்தவ மக்கள் பிரதிநிதித்துவப் படுத்தும் சமூகச் செயற்பாட்டாளர்கள் சிலர் நேற்று திங்கட்கிழமை நடாத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இது தொடர்பான விடயங்களைப் பகிரங்கமாகவே வெளிப்படுத்தினர்.

இங்கு கருத்து தெரிவித்த சமூக செயற்பாட்டாளர் ஒருவர் இவ்வாறு கூறினார்.

“சஹ்ரான் உள்ளிட்ட தீவிரவாதிகள் குழு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டிருந்த பயங்கரவாத ஒழிப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவைக் கைது செய்து உயிர்த்த ஞாயிறு தாக்குலுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தியவர்கள் யார் என்பது இன்று தெளிவாகத் தெரிகின்றது.

டீ.ஐ.ஜி நாலக சில்வா ஒரு கத்தோலிக்கராகும். அவரது 109 யிலிருந்து 115 வரையில் சாட்சியங்கள் குறிக்கப்பட்டுள்ள சாட்சிகள், விஷேடமாக கத்தோலிக மக்களிடம் நான் கேட்டுக் கொள்வது, பாராளுமன்ற தெரிவுக் குழுவின் அறிக்கையினை எடுத்து வாசியுங்கள். இது உங்கள் பொறுப்பாகும். புதிதாக யாரும் இது தொடர்பில் சாட்சிகளைத் தேடித் தரும் வரையில் காத்திருக்கத் தேவையில்லை.

இந்நாட்டு மக்களுக்கும் பொறுப்புள்ளது இதில் இருக்கும் விடயங்கள் என்ன என்பதை அறிந்து கொள்வதற்கு, தேடிப் பார்ப்பதற்கு. இதில் யார் அமர்ந்திருந்தததல்ல. நாலக சில்வா சஹ்ரானின் குழுவை தெளிவாக இனங்கண்டு கொண்டார். அவர் சஹ்ரான் குழுவைப் பற்றி பல வருடங்களாக பலோ செய்து கொண்டு வருகின்றார் என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி