குற்றங்களுக்காக சட்டத்தினால் தண்டனை வழங்கப்பட்டுள்ள கொலைகாரர்கள், பெண்களை வல்லுறவுக்கு உட்படுத்தியவர்களை  தனது ஆட்சி காலத்தினுள் ஜனாதிபதி

பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப் போவதில்லை என ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச சுட்டிக் காட்டியுள்ளார்.

குருநாகல் கல்கமுவ பொதுச் சந்தையில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனா ரோயல் பார்க் கொலைச் சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜூட் ஷிரமன்னவுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பை வழங்கி விடுவித்தமை தொடர்பில் சிவில் சமூகத்திடமிருந்து கடும் எதிர்ப்புக்கள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையிலேயே ஜனாதிபதி வேட்பாளர் சஜித் இக்கருத்தினைத் தெரிவித்துள்ளார்.

தீவிரவாதிகள் மற்றும் குடு வியாபாரிகளுக்கும் தான் எந்த வகையிலும் ஜனாதிபதி பொது மன்னிப்பை வழங்கப் போவதில்லை எனத் தெரிவித்த சஜித் பிரேமதாச, தொடர்ந்தும் உரையாற்றும் போது மேலும் கூறியதாவது,

“வரும் 16ம் திகதியின் பின்னர் தீவிரவாதிகளுக்கும், பெண்களை வல்லுறவுக்கு உட்படுத்தியவர்களுக்கும், கொலை காரர்கள், தூள் வியாபாரிகள், சிறுவர் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டவர்களுக்கும் இடம் கிடைக்கப் போவதில்லை.  இவ்வாறான குற்றங்களுக்காக நீதிமன்றத்தினால் தண்டனை வழங்கப்பட்டவர்களை ஒரு போதும் ஜனாதிபதியாக எனது பதவிக் காலத்தினுள் விடுதலை செய்யப் போவதில்லை.

அவ்வாறானவர்களுக்கு கடும் தண்டனைகளை வழங்கி ஒழுக்கமிகு நாட்டை உருவாக்கி அபிவிருத்தி செய்து புதிய இலங்கையை நாம் உருவாக்குவோம்” என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி