Tamil Leader News
முக்கியம்
இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●
செய்திகள்

ஒவ்வொரு 8 மணித்தியாலங்களுக்கும் மூன்று மரணங்கள்!

T

The Leader Desk

ஜூலை 25, 2023 • 10:57 AM

ஒவ்வொரு 8 மணித்தியாலங்களுக்கும் மூன்று மரணங்கள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நீரில் மூழ்குதல் உள்ளிட்ட காரணங்களால் இலங்கையில் ஒவ்வொரு 8 மணித்தியாலத்திற்கும் மூன்று மரணங்கள் ஏற்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
  • இலங்கையில் வருடாந்தம் 10,000 முதல் 12,000 பேர் வரை விபத்துக்களால் உயிரிழக்கின்றனர்.
  • அவற்றில் சுமார் 10 சதவீதம் பேர் நீரில் மூழ்கி இறக்கின்றனர்.
  • உலகில் வருடாந்தம் 02 இலட்சத்திற்கும் அதிகமானோர் நீரில் மூழ்கி உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
எழுத்து அளவு:

நீரில் மூழ்குதல் உள்ளிட்ட காரணங்களால் இலங்கையில் ஒவ்வொரு 8 மணித்தியாலத்திற்கும் மூன்று மரணங்கள் ஏற்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வைத்திய நிபுணர்கள்  மேலும் சுட்டிக்காட்டியதாவது, வயது முதிர்ந்த ஒருவர் இறப்பதற்கு ஒரு அடி நீர்மட்டம் கூட போதுமானது.

இலங்கையில் வருடாந்தம் 10,000 முதல் 12,000 பேர் வரை விபத்துக்களால் உயிரிழக்கின்றனர்.

அவற்றில் சுமார் 10 சதவீதம் பேர் நீரில் மூழ்கி இறக்கின்றனர்.

20 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் நீரில் மூழ்கி அதிகமாக பலியாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உலகில் வருடாந்தம் 02 இலட்சத்திற்கும் அதிகமானோர் நீரில் மூழ்கி உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, நாம் இது குறித்து என்ன தெரிந்து கொள்ள வேண்டும்?

சுகாதார அமைச்சின் தொற்று அல்லாத நோய்கள் பிரிவின் விபத்து தடுப்பு மற்றும் மேலாண்மைப் பிரிவின் பிரதானி, விசேட வைத்தியர் எஸ் சிறிதுங்க,

"இலங்கையில் ஒரு நாளைக்கு 8 மணித்தியாலங்களுக்கு குறைந்தது 03 பேர் நீரில் மூழ்கி இறப்பதை நாம் காண்கிறோம். இலங்கையின் போக்கின் படி, 20 வயதுக்கு மேற்பட்ட முதியோர் குழுவே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்."

களுபோவில போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை நிபுணர் வைத்தியர் எஸ். லியனகே,

"நீரில் மூழ்கும் நபரை கையால் பிடிக்காதீர்கள்... உரிய உயிர் பாதுகாப்பு பயிற்சி பெறாத வரை."

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஒவ்வொரு 8 மணித்தியாலங்களுக்கும் மூன்று மரணங்கள்! | Tamil Leader | We Lead the Nation