கடந்த ஏப்ரல் 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்காக மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ

பொறுப்புக் கூற வேண்டும் எனக் கூறி கிரிபத்கொடை நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புகள் உள்ளது எனச் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு கோட்டாபய ராஜபக்ஷ பதலளிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்ட சுலோகங்களையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கி நின்றதைக் காணக் கூடியதாக இருந்தது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ள சமூக மற்றும் சமாதானத்திற்கான மையத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளரும், உச்ச நீதிமன்ற சட்டத்தரணியுமான பாதர் அசோக் ஸ்டீவனின் கூற்றுக்கு அமைய  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் எதிர் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் முன்கூட்டியே தகவல்களை அறிந்திருந்துள்ளார்.

“சுருக்கமாகச் சொல்லப் போனால் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் முன்கூட்டியே அறிந்திருந்தார். இப்போது இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எமது கத்தோலிக்க மக்களின் வாக்குகளை இலக்காகக் கொண்டு செய்யும் வேலைகளைப் பற்றி நாம் வேதனை அடைகின்றோம் என்பதை பகிரங்கமாகவே கூற வேண்டும்” என அவர் அண்மையில் ஊடகங்களில் தெரிவித்திருந்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி