களுத்துறை சிறிகுருச சந்தியில் உள்ள தற்காலிக விடுதி ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த 16 வயதுடைய பாடசாலை மாணவி

மேலும் மூவருடன் பிரவேசிக்கும் CCTV காட்சிகள் "அத தெரண" விற்கு கிடைத்துள்ளது.

விசாரணையில், குறித்த சிறுமி நேற்று (06) பிற்பகல் குறித்த பகுதியில் உள்ள விடுதிக்க மேலும் இரு இளைஞர்கள் மற்றும் யுவதி ஒருவருடன் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த குழுவினர் நேற்று மாலை 6.30 மணியளவில் குறித்த விடுதிக்கு சென்றுள்ளனர்.

அவர்கள் தேசிய அடையாள அட்டையை சமர்ப்பித்து அந்தந்த விடுதியில் இரண்டு அறைகளை முன்பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையில், இரண்டு அறைகளை முன்பதிவு செய்த போதும், நான்கு பேரும் ஒரே அறையில் இருந்து மது அருந்திக் கொண்டிருந்ததை விடுதி ஊழியர் ஒருவர் பார்த்துள்ளார்.

பின்னர், ஒரு இளம் பெண்ணும் ஒரு இளைஞனும் விடுதியை விட்டு வெளியேறியுள்ளனர்.

சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு, மற்ற இளைஞனும் பீதியுடன் விடுதியை விட்டு வெளியேறுவதை ஊழியர்கள் பார்த்துள்ளனர்.

அப்போது விடுதிக்கு உணவு எடுக்க வந்த நபர் ஒருவர் விடுதியை ஒட்டியுள்ள ரயில் தண்டவாளத்தில் பெண் ஒருவர் நிர்வாணமாக கிடப்பதாக விடுதி ஊழியர்களிடம் கூறியுள்ளார்.

இது குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனையிட்ட போது குறித்த சிறுமி ஏற்கனவே உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.

நாகொட பிரதேசத்தை சேர்ந்த களுத்துறை பாடசாலையில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 16 வயதுடைய மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவி விடுதிக்குள் செல்வதற்கு வயது தடையாக உள்ளதால் வேறு ஒருவரின் தேசிய அடையாள அட்டையை காண்பித்து விடுதிக்குள் நுழைந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பில் பொலிசார் இதுவரை பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளனர்.

திடீரென விடுதி அறையை விட்டு பீதியுடன் வெளியேறிய இளைஞன், முன்னதாக விடுதியில் இருந்து வெளியேறிய இளைஞனையும், யுவதியையும் அழைத்து அவசரம் என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

இறந்த சிறுமி மூன்றாவது மாடியில் இருந்து ரயில் தண்டவாளத்தில் குதித்ததாக கூறிய அவர் பின்னர் காரில் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர், ரயில் தண்டவாளத்தில் கிடந்த மாணவியின் சடலத்தை மற்றைய இளைஞனையும், யுவதியையும் தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தி விட்டு அங்கிருந்து வெளியேறி இரவு 9.30 மணியளவில் பொலிஸில் சரணடைந்துள்ளனர்.

உயிரிழந்த சிறுமியுடன் கடைசி நேரம் வரை தங்கியிருந்து தப்பிச் சென்ற சந்தேக நபரை கண்டுபிடிக்க களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சந்தேக நபர் தற்போது இரண்டு பெண்களை திருமணம் செய்துள்ளதோடு, அவர் இரண்டாவது திருமணம் செய்த பெண்ணிடம் பொலிஸார் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி