பொரளை வெஸ்டர்ன் வைத்தியசாலைக்கு சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக வழங்கப்பட்டுள்ள அனுமதியை விசாரணைகள் முடியும் வரை

இடைநிறுத்துமாறு விசாரணைக் குழு பரிந்துரைத்துள்ளதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

பொரளை வெஸ்டர்ன் வைத்தியசாலையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தெரன உகுஸ்ஸ வெளியிட்ட தகவலுக்கு அமைய, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை இடைநிறுத்துமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியசாலைக்கு அறிவித்துள்ளார்.

குறித்த கடிதத்தை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி பொரளை, வெஸ்டர்ன் வைத்தியசாலையினால் சமர்ப்பிக்கப்பட்ட ரிட் மனு இன்று (04) அழைக்கப்பட்ட போதே பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விகும் டி ஆப்ரூ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறித்த வைத்தியசாலையில் சிறுநீரக மாற்றுச் சத்திரசிகிச்சை தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களை ஆராய்வதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் 9 பேர் கொண்ட குழு ஒன்றை நியமித்துள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் மேலும் தெரிவித்தார்.

இந்த வழக்குகள் தொடர்பான விசாரணைகள் முடியும் வரை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு வழங்கிய அனுமதியை இடைநிறுத்துமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு குழு பரிந்துரைத்துள்ளதாகவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக சம்பந்தப்பட்ட வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட அனுமதி டிசம்பர் 31ஆம் திகதியுடன் காலாவதியாகியுள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி