திபெத்திய புத்த மதத் தலைவர் தலாய் லாமா தன்னிடம் ஆசி பெற வந்த சிறுவனிடம் நடந்து கொண்ட விதம் பெரும் சர்ச்சையை

கிளப்பியுள்ளது.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைராலக பரவிய நிலையில், பலரும் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் எங்கு எப்போது நடைபெற்றது என்ற விவரம் தெரிவில்லை. அந்த வீடியோவில் சிறுவன் ஒருவன் தலாய் லாமாவிடம் ஆசி பெற வருகிறான்.

அந்த சிறுவனை பிடித்து நிறுத்தி அவர், எனக்கு நாக்கை வெளியே நீட்டிய தலாய் லாமா, அதை முத்திமிடுவாயா என்று வலியுறுத்துகிறார்.

முதலில் சிறுவன் தயக்கத்துடன் நின்றார். தலாய் லாமா விடாமல் கையைப்பிடித்துக் கொண்டிருந்த நிலையில், பின்னர் அவரின் நாக்கில் முத்தமிட்டு சிறுவன் சென்றான்.

இந்த சர்ச்சை சம்பவத்தின் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாக பரவி வரும் நிலையில், பல்வேறு தரப்பினர் தலாய் லாமாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

மேலும், அவர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தலாய் லாமா மன்னிப்பு கோரியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்த சிறுவன் மற்றும் அவனது குடும்பத்தினர், நண்பர்களிடம் நான் மன்னிப்பு கோருகிறேன். எனது வார்த்தைகள் காயப்படுத்தியிருக்காலம்.

பொதுவெளியில் தன்னை சந்திக்க வரும் நபர்களிடம் அப்பாவிதனமாக, விளையாட்டுத்தனமாக செயல்படுவது தனது வழக்கம். அப்படித்தான் அது நிகழ்ந்தது. இதற்கு வருந்துகிறேன் என்றுள்ளார். சீனா கொடுத்த நெருக்கடி காரணமாக திபெத்தில் இருந்து வெளியேறி 60 ஆண்டு காலமாக இந்தியாவின் தரம்சாலாவில் தலாய் லாமா வசித்து வருகிறார்.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி