015ம் ஆண்டில் பெற்ற ஜனநாயகம், சட்டத்தின் ஆதிக்கம், நீதிமன்ற சுயாதீனத் தன்மை போன்றவற்றைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமாயின் சஜித் பிரேமதாசாவை

வெற்றி பெறச் செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்தார்.  நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

“வரவிருக்கும் எதிரி மிகவும் ஆபத்தானவர். ஒரு வருடத்திற்கு முன்னர் வியத்மக சம்மேளனத்தில் வைத்து கமல் குணரத்ன என்ன கூறினார்?,  அரசியலமைப்பு மாற்றத்திற்காகச் செயற்படுபவர்கள் மாத்திரமல்ல, அரசியலமைப்பு மாற்றத்திற்கு ஒத்துழைப்பை வழங்குபவர்களையும் கூட கொலை செய்து, அந்த 87, 89, 90ம் ஆண்டுகளைப் போன்று அவர்களை உடல்களை முழுமையாகக் கொண்டு செல்ல முடியாதவாறு செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தார்.

அரசியல் அமைப்பு திருத்தத்தைக் கொண்டு வருபவர்கள் தேசத் துரோகிகள், அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என கடற்படையில் உயர் பதவி வகித்த சரத் வீரசேகர கூறியிருந்தார்.  இவ்வாறான பாதாள உலகத்தினர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நீதிமன்றத்திற்கு என்ன நடக்கும் என்பதை புதிதாகக் கூறத் தேவையில்லை. அவற்றை நாம் அறிவோம்.  எனவே இனிமேலும் பிசாசு கதவுக்கு அருகில் இருக்கும் போது வீணை வாசித்துக் கொண்டிருப்பதில் பயனில்லை.

அதனை விட முக்கியமான அரசியல் காரணம் உள்ளது. நியாயமான காரணங்களுக்காக ஆர்ப்பாட்டம் செய்தவர்களுக்கு ரத்துபஸ்வலவில், சிலாபத்தில் போன்ற இடங்களில் என்ன நடந்தது என்பதை நாம் கண்டோம். அவைகள்தான் இனி எதிர்காலம். இவை செயலாளர் பதவியில் இருக்கும் போது நடந்தவை. ஜனாதிபதி பதவி கிடைத்தால் எப்படி இருக்கும்?

இந்நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாக்க, 2015ம் ஆண்டில் கிடைத்த ஜனநாயக சந்தர்ப்பங்களைப் பாதுகாக்க, நீதிமன்ற சுயாதீனத்தைப் பாதுகாத்துக் கொள்ள, சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு இருக்கும் உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ள, பாராளுமன்றத்தை தொடர்ந்தும் பலமிக்க நிறுவனமாக முன்னெடுத்துச் செல்ல நாம் இந்த நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி