அநுர குமார திசாநாயக்கா அல்லது மஹேஸ் சேனாநாயக்கா அல்லது ரொஹான் பல்லேவத்தை போன்ற யாருக்கேனும் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தாலும்

அவர்கள் ஒருவராலும் வெற்றி பெற முடியாத காரணத்தினால், கோட்டாபய என்ற அதி பயங்கரமான பெரும் அரக்கனைத் தோற்கடிப்பதற்காக சஜித் பிரேமதாசாவை வெற்றி பெறச் செய்வதற்கு வாக்களிக்குமாறு முன்னணி பாடகர் சுனில் பெரேரதா மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது இக்கோரிக்கையை விடுத்த அவர், அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கும் மேலும் கூறியதாவது,

“நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் எந்த ஒரு சுயேட்சை வேட்பாளருக்கு வாக்களித்தாலும் அவர்களால் ஒரு போதும் வெற்றி பெறவே முடியாது.  மகேஸ் சேனநாயக்காவுக்கு, அநுர குமாரவுக்கு, பல்லேவத்தைக்கு என்று எவராலும் வெற்றி பெற முடியாது.

எனவே நாம் செய்ய வேண்டியது இருக்கும் அரக்கனை விரட்டுவதாகும்.  தற்போது எந்த ஒரு சுயேட்சை வேட்பாளருக்கும் வாக்கை அளிப்பதில் எந்தப் பயனுமில்லை. இவர்கள் யாராலும் வெற்றி பெற முடியாது என்பதாலும், இருக்கும் பயத்தினாலும் நான் சஜித் பிரேமதாசாவுக்கு வாக்களிப்பதற்குத் தீர்மானித்துள்ளேன்.

எனக்கு நன்கு தெரிந்த ஒரு சகோரிகை கூடாத வார்த்தைகளால் கோட்டாபய திட்டினார். தற்போது அந்தச் சகோதரி இலங்கையில் இல்லை. அவர் கேட்டது ஒன்றும் தப்பான ஒன்றல்ல. “நாய் குட்டி ஒன்றைக் கொண்டு வரும் விமானம் சென்று விட்டதா?” என சாதாரணமாக ஊடகவியலாளர்கள் கேட்டதைப் போன்று கேட்டார்.  அப்போது மிகவும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அச்சகோதரியைத் திட்டினார். “நாய் குட்டியை அல்ல, தேவையாயின் யானையினையும் விமானத்தில் கொண்டு வர என்னால் முடியும். இதில் உனக்கு இருக்கும் வருத்தம் என்ன” எனக் கேட்டார். இவ்வாறு சூடாகும் தலைவர் நல்லவராக இருக்க முடியாது.

அச்சகோதரி லசந்த விக்ரமதுங்கவிடம் பணியாற்றியவர். லசந்த படுகொலை செய்யப்பட்டதும் அவர் பயந்து போனார். இப்போது அந்தக் குடும்பம் அமெரிக்காவில் வசிக்கின்து. அச்சகோதரியின் பெயர் பெட்ரிகா ஜான்ஸ்” என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி