தற்போதைய இராணுவத் தளபதியை நீக்க வேண்டும் என யார் அழுத்தங்களை வழங்கினாலும் நாட்டின் இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா மீது

கைவைப்பதற்கு எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.  இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகல நகரில் இடம்பெற்ற (26) தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிவித்திகல பிரதேச சபை உறுப்பினர் திலிப் ராஜபக்ஷ, கஹவத்தை பிரதேச சபை வேட்பாளர் திருமதி வீரகோன், ஸ்ரீ.ல.சு.கட்சியின் இரத்தினபுரி மாவட்ட ஊடக இணைப்புச் செயலளார் தனூஜ் கமகே உள்ளிட்ட ஏராளமான ஆதரவாளர்கள் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவைவழங்குவதற்காக இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய சஜித் பிரேமதாச மேலும் கூறியதாவது,“சஜித் வந்தாலும், கோட்டா வந்தாலும் தற்போதைய இராணுவத் தளபதியை நீக்க வேண்டும் என வெளிநாடு ஒன்று தெரிவித்த கருத்து பத்திரிகைகளில் வெளியாகியிருக்கின்றது. அவ்வாறு குற்றம் சுமத்தும் நாட்டின் குடியுரிமை உள்ளவரிடத்தில் அந்த அழுத்தத்தைத் தெரிவிக்க முடியும். தாய் நாட்டின் சுத்தமான குடியுரிமையைக் கொண்டுள்ள இலங்கையரான என்னிடம் அவ்வாறான அழுத்தங்களைச் செய்வதற்கு அவர்களால் முடியாது. இரு பக்கத்திலும் கால்களை வைத்துக் கொண்டிருக்கும் இரட்டைப் பிரஜாவுரிமை எனக்கில்லை. 

எனது எதிர்த்தரப்பு வேட்பாளர் இந்நாட்டின் நிரந்தர குடியுரிமையைக் கொண்டவரா என்ற பிரச்சினை உள்ளது. அவர் இரு பக்கத்திலும் இரு கால்களையும் வைத்துக் கொண்டிருக்கின்றார். ஒரு அமெரிக்காவிலும் அடுத்த கால் இலங்கையிலும்.  ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்டால் தனக்கும், தனது குடும்பத்திற்கும் பிரச்சினை ஏற்படும் என்ற அச்சத்தில் இராணுவத்தினைக் காட்டிக் கொடுத்து விட்டு தன்னைப் பாதுகாத்துக் கொள்கின்றார்” என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி