தேசிய சக்திகளின் பிரதான இலக்காக இருக்க வேண்டியது கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதே தவிற, மஹிந்தவின் அரசாங்கம் ஒன்றை

உருவாக்குவதல்ல என தேசிய சிந்தனை அமைப்பின் பிரதானி பேராசிரியர் நளின் த சில்வா வலியுறுத்தியுள்ளார்.

நேற்று முன்தினம் (24) தேசிய உரிமைகள் அமைப்பினால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது கோட்டாபய ராஜபக்ஷவை அபேட்சகராக  நியமித்துக் கொள்வதற்கு கடும் அழுத்தங்களை வழங்கியவர்களுள் முக்கியமானவரான பேராசிரியர் நளின் த சில்வா இதனைத் தெரிவித்தார்.

“கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் தவறுகள் இடம்பெறாமல் இருப்பதையே நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். அமையப் போவது மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் அல்ல என்பதையும் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். இது எமது பிரதான இலக்காகும். இது கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கமே தவிற வேறு ராஜபக்ஷ ஒருவரின் அரசாங்கம் அல்ல என்தையும் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்” என இந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது அவர் கூறினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி