பட்டபொல பிரதேசத்தில் ATM அட்டையை திருடி 660,000 ரூபாய் கொள்ளையடித்த பெண்ணொருவர்

கைது செய்யப்பட்டுள்ளார்.

பட்டபொல பொலிஸ் நிலையத்தில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்று முன்தினம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பட்டபொல பிரதேசத்தை சேர்ந்த 33 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ATM அட்டையை திருடி பாரிய கொள்ளையில் ஈடுபட்ட பெண் | Woman Stolen Huge Amount From Atm

முறைப்பாடு செய்தவர் வெளிநாட்டில் இருந்து வந்தவர் எனவும் அவர் தனது தாய்க்கு அனுப்பிய பணத்தை பெற பயன்படுத்திய ATM அட்டையை சந்தேகநபர் திருடியுள்ளதாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பெண்ணொருவர் கைது
திருடப்பட்ட பணத்தில் எடுக்கப்பட்ட மூன்று தங்க நகைகள், ஒரு தங்க வளையல் மற்றும் 35,000 ரூபா பணம் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபர் நேற்று பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் முன்னிலப்படுத்தப்பட்டுள்ளார்கள். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பட்டபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி