ஐக்கிய தேசிய முன்னணியிள் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவின் தேர்தல் விஞ்ஞாபணம் ஒக்டோபர் 30ம் திகதி வெளியிடப்படும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர

தெரிவித்தார்.

அமைச்சர் சஜித் பிரேமதாசாவின் ஜனாதிபதி தேர்தல் கொள்கைப் பிரகடணக் குழுவின் பிரதானி நிதி அமைச்சர் மங்கள சமரவீரவாகும். இராஜாங்க அமைச்சர்களான கலாநிதி ஹர்ச த சில்வா, எரான் விக்ரமரத்ன ஆகியோரும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் பலரும் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

இந்தக் குழு அண்மையில் பிரதமர் உள்ளிட்ட ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களைச் சந்தித்து குறித்த தேர்தல் விஞ்ஞாபண வரைவினைக் கையளித்துள்ளனர். பிரதமரின் தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர்களான ரவி கருணாநாயக்கா, ரவுப் ஹக்கீம், பீ. திகாம்பரம், ரிசாட் பதியுத்தீன், சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது கட்சித் தலைவர்களால் குறித்த வரைவில் பல திருத்தங்களை மேற்கொண்டு அதற்கு அங்கீகாரத்தையும் வழங்கியிருந்தனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web