மே 6ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலை முன்னிட்டு மே மாதம் 5
மற்றும் 6ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, மே 7ஆம் திகதி பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வாக்களிப்பு நிலையங்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகள் அனைத்தும் 04.05.2025ஆம் திகதி தொடர்புடைய கிராம சேவக அலுவலர்களிடம் பாடசாலைகளை ஒப்படைக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்களிப்பு நிலையங்களுக்கு தேவையான மேசைகள், கதிரைகள் மற்றும் மண்டப வசதிகளை வழங்குவதற்கு அனைத்து வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்கள் அறிவுறுத்தல் வழங்க வேண்டுமெனவும் மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இணைப்பு 1இல் குறிப்பிடப்பட்டுள்ள பாடசாலைகள் அந்தந்த காலகட்டங்களில் மாத்திரம் விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், பாடசாலை நேரத்திற்கு பிறகு கோரப்பட்டுள்ள பாடசாலைகள் சம்பந்தப்பட்ட தினத்தில் பாடசாலை நிறைவடைந்ததும் தேர்தல் நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.